தாலியின் சக்தி | தினகரன் வாரமஞ்சரி

தாலியின் சக்தி

இது ஒரு நல்ல நேரம். இது ஒரு கஸ்ட நேரம் சமூக நிலைமை குழப்பம் நிறைந்தது. இந்தத் தருணத்தில் தான் கந்தசாமி முதலியாரின் மகன் கிருஷ்ண குமார் வெளிநாடு பயணம் செய்ய முடிவெடுத்தான். இங்கிலாந்து செல்ல முடிவு எடுத்தான். சுருக்கமாக அழைக்கும் குமார் மேல்படிப்பு படிக்கும் நோக்கமாக விருந்தது.

அவன் நல்லாப் படித்து பட்டங்கள் பெறவேண்டும் என்ற போதிய பணம் தந்தையா அனுப்புவார்.மேல் நாட்டு மோகம் தகப்பன். அனுப்பிய பணத்தை வீண் விரயம் செய்தான் படிப்பில் கவனம் இல்லாமல் போயிற்று. பரீட்சையில் தோல்விதான் அவனுக்குக் கிடைத்தது. இந்த நிலையில் வீடு திரும்ப அவன் வெக்கப்பட்டான் வேதனைப்பட்டான்.

இதனால் அங்கே ஒரு தாயனத்தில வேலை பெற்று பணியாற்றினாள். அங்கே தங்க இடம் கொடுத்தார்கள்.

தந்தையார் வெளிநாடு செல்ல முன் இவனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தார் இவர் பழமையை விரும்புவர். ஆச்சாரமாக வாழ்வு நடத்துபவரா நல்ல குடும்பமான் சொந்தக்காரரின் அழகான மகனை திருமணம் செய்து வைத்தார்.

லண்டன் சென்ற குமார் தான் பணியாற்றும் தாபனத்தில் வேலை புரியும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான்.

அவன் காதலித்த பெண்ணே. கிறிஸ்தவமதம் அவனும் அவளின் மதத்திற்கு மாறினான். இந்த மேல் நாட்டுப் பெண்ணை மணப்பதற்காக ஊரில் தன் காதலி கட்டிய பன்பான மனைவிக்கு திருமண பந்தத்தை தள்ளிவிடும் படி கடிதம் எழுதினான்.

இவள் காதலித்து மணந்த பெண் நல்லவள் தான். உலகத்தில் எல்லாப் பெண்களும் ஒரே மாதிரிதான் பொதுவாக இவளும் அதற்கு விதிவிலக்கல்ல.

காதலும் சாதிமதம் கிடையாது. அன்புதான் மதம், எல்லாம் அவன் கணவனுக்கு அன்புடன் வாழ்ந்தான் குமார் மேல் மிகவும் பற்றுப் பாசத்துடன் குடும்பம் நடத்தினாள்.

புலம்பெயர்ந்த வந்த கிராம பழக்கங்களை மறந்த குடிப் பழக்கத்துக்கு அடிமையானான். குடி அவன் ஆரோக்கியத்தை பாழாக்கியது. பலவீனமும் ஆனான் அவளைத்திருத்துவதற்கு அவளுக்கு திடமான நெஞ்சம் வேண்டும். அவனின் பெரும் முயற்சியால் அவளின் குடிப்பழக்கத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தாள் தன்னைத் திருத்தி நல்ல நிலைக்கு கொண்டு வந்ததற்காக மிகவும் பாசத்துடன் நன்றியுடனும் இருந்தான். ரொம்ப மகிழ்ச்சியடைந்தாள். அவளை மிகவும் நேசித்தான்.

இரண்டு பேரும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். ஒழுக்க சீலரான தகப்பன் இந்த விடயம் பற்றி தகவல் கிடைத்தது. இதை அறிந்த தகப்பன் பெரும் கோபம் கொண்டார். தன் மகன் இல்லை என்று சத்த போட்டார். அவனை முழுகிவிட்டேன் என்று கோபம் கொண்டார்.

கந்தசாமி முதலியால் மனைவி குமார் இளம் வயதில் இருக்கும் போதே இறந்துவிட்டார். சில வருடம் கழித்து கந்தசாமி முதலியார் இன்னொரு மணம் செய்தார். இவரின் நண்பன் முருகேசுதான் இவனை வெளிநாடு செல்ல யோசனை கூறி அழுத்தம் கொடுத்தவர்.

கந்தசாமி முதலியார் தன் மகனின் உயர்ச்சி பற்றி பெரும் எதிர்பார்ப்பு இருந்தது இதற்காக பெரும் பணம் செலவழித்தால். தன் எதிர்பார்ப்பு எல்லாம் வீணாயிற்று. இந்த நிலையில் தகப்பன் பெரும் விரக்தியுடன் கோபம் வெறுப்பையும் உண்டாயிற்று.

முதலியாரின் இரண்டாவது மனைவி மிகவும் சிறந்த பெண். குமாரின் மேல பற்றும் பாசமும் அன்பும் கொண்டிருந்தால் இவனைத் தன் சொந்த மகன் போலவே கருதினான். குமாரும் இவளின் மேலே பற்றும் பாசமும் வைத்திருந்தான் ‘சின்னம்மா’ என்றே அழைப்பான் இவர்களின் இந்த பிணைப்பு முதலியாருக்கு சந்தோசம் கொடுத்தது.

ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. வெறுப்புத்தான் மிச்சம். மனைவி குமாரைப்பற்றி கதைத்தால் கோபம் வந்து விடும்.

பாவம் இளம் மருமகனின் நிலைமையை யோசித்து கோபம் கொள்வது ஒரு பக்கம் அந்த நல்ல பெண்பிள்ளையின் வாழ்வை கெடுத்து விட்டானே. மன்னிக்க முடியாத குற்றம் செய்து விட்டான்.

கோபால் இவரின் நண்பனின் மகனும் ராம் இவனுடன் சென்றவன்தான். அவன் ஒழுங்காகப் படித்துப்பட்டம் பெற்று நல்ல அரசு திணைக்களத்தில் பணிபுரிகிறான். ராம் தன் நல்ல நண்பனையிட்டு பல முறை கவலைப்பட்டான்.

தெரிந்தோ தெரியாமலோ தனது தகப்பனும் வெளிநாடு செல்ல வைத்ததிற்கு ஒரு விதத்தில் உடைந்தாகிவிட்டார்.

ராமின் இதயம் இந்த இளம் பெண்ணின் நிலைமையை யோசித்து கவலைப்படும். குமாரைத்திருமணம் செய்ததால் தான் இந்தப் பெண் கஷ்டப்படுகிறாள்.

ராமுக்கு இருபத்தெட்டு வயது இருக்கும். எனவே இவன் வீட்டில் திருமணப்பேச்சு எடுக்கப்பட்டது. வழக்கம் போல் இவன் திருமணத்தை ஒத்திப்போட்டு இது இப்படியிருக்க ராம் ஒருநாள் ஒரு முடிவுக்கு வந்தான் அதை அவன் தந்தையிடம் கூறினான். தந்தையிடம் ராம் அந்தப் பெண் குமாரால் தான் வாழ்க்கை பாதித்தடைந்துள்ளாள்.

ஆனதினால் நான் அவளை திருமணம் செய்ய விரும்புகிறேன்” என்றான். கொஞ்சநேரம் பேச்சு மூச்சின்றி இருந்தார். பயங்கரமான முடிவுபோல் தோன்றிற்று ஆனால் பின்பு மகனிடம் எனக்கு ஒரு எதிர்ப்புமில்லை. ஆனால் உன் நண்பனின் பெற்றோர் இதற்கு இணங்குவார்களென்ன அறியவேண்டும்.

சில நாட்கள் கழித்து கந்தசாமி முதலியார் நண்பனை சந்தித்தார். மகளின் யோசனை தெரிவித்தார். அதற்கு அவர் இப்படியான செயல்கள் இதுவரையும் நடந்ததில்லை. அப்படி செய்யவும் முடியாது என்றார்.

காலம் கடந்தது ராமனின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். இதுவும் குமாரின் மேல் உன்ன கோவத்தால் அதே சமயம் துக்கத்தில் ஆழ்த்திருக்கும் மருமகனின் மாற்றத்திற்கு உதவலாம் என நினைத்தான்.

ஒருமாதம் பின்பு முதலியார் தனது சகோதரிடம் சென்று விஷயத்தைக் கூறினார். அவர்கள் யோசனையின் படி இந்த எண்ணம் நன்று. எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானம் மறைந்து விடும். காலம் மாறி விட்டது. நாங்களும் பழையனவற்றை தூக்கிப்பிடியாமல் விட்டுக் கொடுத்து காலத்திற்கு ஏற்பமாறவேண்டும். உலகத்தோடு ஒத்துப்போக வேண்டும். மருமகள் ரேணுகாகவுக்கு நல்ல காலம் பிறந்துள்ளது போல் தெரிகிறது. இந்தச் சந்தர்ப்பத்தை நல்ல முறையில் ஏற்றுக்கொள்வது நல்லதுதானே. ராமும் நல்ல பையன் படித்திருக்கிறான். நல்ல பதவியில் பணி புரிகிறான். மிகவும் பொருத்தமானவின் உன்னுடைய மகன் செய்த தவறுக்காக அவன் செய்யும் தியாகம் மிகப் பெரிது இதற்கு நீயும் ஒத்துக்கொள்ள வேண்டும். ரேணுகாவின் தாயாரும் சம்மதம் தெரிவிக்கிறார். ராம் சொன்ன தீர்மானத்தை ரேணுகாவிடம் கூறினார்கள். அவள் ஒத்துக் கொள்வாரா? அவள் ஒத்துக் கொள்வாள் முதலியார் கூறினார். நாங்கள் எல்லோரும் சேர்ந்து கூறும்போது அவள் மறுக்கமாட்டாள்.

அவள் வாழ்க்கையில் இத்திருப்பம் அதிர்ஸ்டமாக கருதவேண்டும். ராம் “அவனை நேரில் சென்று கேட்க விரும்புகிறேன் என்றார் சந்திப்பின்போது ரேணுகா உறுதியாக, “ஒருபோதும் நடைபெறாது. செய்யக் கூடிய காரியமும் அல்ல. என் கணவர் உயிருடன் இருக்கும் போது நான் இந்த யோசனை சிந்திக்கவேமாட்டேன். அவர் விரும்பினால் வேறு எவரையும் திருமணம் செய்யலாம் எனக்கு ஆட்சேபனை இல்லை. அவர் கட்டியதாலி என் கழுத்தில் இருக்கிறது. அவர் போட்ட முடிச்சு இன்னும் கழுத்தில் மங்களமாக காட்சியளிக்கிறது. நான் இன்னும் அவர் மனைவியே. அதில் எவ்விதமாற்றமுமில்லை.

இரண்டு குடும்பத்தாரும் எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை. ராமும் தன் முயற்சி பலன் கிடைக்கவில்லை மனத்தைத் தேற்றிக் கொண்டான்.

ரேணுகாவின் சந்திப்பு குமாரிடம் பெரும் மாற்றத்தையும் மென்மையையும் கொண்டுவந்தது. அழுத குரலில் குமார் அவளிடம் இன்னும் என்மேல் அன்பு உண்டா என்றான். அவள் அவன் காலடியில் வீழ்ந்தாள். குமார் அவனை இரு கைகளாலும் அணைத்து தூக்கினாள்.

குடியோதையில் கெட்டுப்போக இருந்த என்னை காப்பாற்றினாள் அந்த வெள்ளைக்காரப் பெண்.
சில மாதங்கள் கழிந்தன. எவர் மங்களமான மாங்கல்யத்தை புனிதமாகவும் சக்தி உள்ளதும் என்று உணர்கிறானோ அவன் வாழ்க்கையில் முரண்பாடுகள், விவாகரத்துக்கள் தோன்றாது. அப்படி ஒரு சக்தி அந்தத் தாலிக் கொடிக்கு உண்டு.

யோகன்

Comments