கொரோனா இசைத்த முகாரியின் ராகம் !!! | தினகரன் வாரமஞ்சரி

கொரோனா இசைத்த முகாரியின் ராகம் !!!

காரிருள் கவ்விக்கொண்டதோ
நிலவை தொலைத்து
நிம்மதியை தேடும் அவலம் !
எங்கும்
எல்லோர்
வாயிலும் - மெல்லுபொருளாகி
போன சொல்லாகி கொரோனா
இருக்கிறது !
கண் பார்வைக்கு
புலப்படா
கோவிட் 19
வைரஸ் கண்டு
உலகமே மிரண்டு
நிற்கிறது !
பயந்து பல்லியொடுக்கமாய்
கிலி கொள்ள வைத்ததன்
முழு முதற்- காரணம்
பலியெடுக்க ஊதிய
சாவுமணியின் சங்க நாதம் !
திமிர்வாதம் பிடித்த
திமிலங்கள் சாட்ட
மௌனவிரதங்கள் களைய
மெல்ல சுருட்டிக்கொண்டது
வாலை !

என்.எம்.அலிக்கான்
சாய்ந்தமருது. 

Comments