காதலர் தினப் பரிசு | தினகரன் வாரமஞ்சரி

காதலர் தினப் பரிசு

உன்னை உயிரினும் மேலாக நேசித்தேன் 
எப்பொழுதும் உன் புகழே பாடினேன் 
எனது மனமார்ந்த காதலி ஆனாய் 
நீயும் அதே போல் இருப்பாய் என எண்ணினேன் 
என்று காதலர் தினம் 
நீ என்னை சந்திக்க வந்தாய் 
நான் ஆவலோடு உன்னைப் பார்க்க, 
நீயோ ஒரு அட்டைப் பெட்டியை நீட்ட 
நான் அதை வாங்கிப் பார்த்தேன் 
அதில் நான் உனக்கு தந்த பரிசுப் பொருட்கள் 
கேள்விக் குறியாக உன்னைப் பார்த்தேன் 
உன் கையில் திருமண அழைப்பிதழ் 
நான் வாயடைத்துப் போனேன் 
என் கையில் அப்பெட்டி  
என்னைப் பார்த்து சிரித்தது 
என் காதலின் முடிவுதெரிந்து விட்டது

வான்மதி  

Comments