வாணியின் வானொலி நீ | தினகரன் வாரமஞ்சரி

வாணியின் வானொலி நீ

வான் வெளி வீதியிலே- 
வான் நிலாபோல் வந்து 
வருசங்கள் பலகடந்து(ம்) 
வான்குயில் தேனிசை பாடுது! 
பாட்டதுவும் வெறும் பாட்டல்ல முற் 
பாட்டனவன் வழிவந்த எங்கள் 
சங்கத்தமிழ்ப் பணியில் – நின் 
அங்கத்துவத்தின் அகவை 95! 
சிங்க நடைபோட்டுச் செப்பமுடன் 
சிகரத்தில் ஏறுகின்ற அன்னையே 
எந்த வனொலிப் பிள்ளை – இன 
வந்து முந்தப் போகிறது உன்னை! 
பொழுது போக்குச் சாதனைமாய் நீயிருக்க 
எழுதி நாமும் உன்னுடன் இணைந்திருக்க 
கலைக்களங்கள் அமைத்தளித்த – எங்கள் 
கலைவாணியின் ஒரே வானொலி நீதானம்மா! 

பாண்டியூர்
பொன். நவநீதன்  

Comments