பிரிவின் ஏக்கம் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

பிரிவின் ஏக்கம்

இணைந்த இதயங்கள் 
ஒன்றுபட வேண்டும் 
இணை பிரியாமல் என்றும் 
கைகோர்க்க வேண்டும் 
அறியாத தவறுகள் 
எவர் செய்தாலும் - அதை 
பழியாக நினைத்து 
விலகிட வேண்டாம் 
கொஞ்சுகின்ற நீங்களே 
வார்த்தையால் கொன்றுவிடாதே 
உன் காதலின் அன்பை 
வெறுத்து விடாதே...... 
புரிதல் 
அது இருக்கும் வரையில் 
பிரிவு 
அது பக்கம்தான் நமக்கிடையில் 
விடியலுக்காக ஏங்கும் 
பறவைகள் நாமா 
இல்லை 
வளர்ச்சிக்காக காத்துநிற்கும் 
விதைகளும் நாமா 
எண்ணி எண்ணியே நகர்கிறது 
என் வாழ் நாட்கள்......

தேவந்தி, காரைதீவு

Comments