என்றும் வாழும் ஜீவா | தினகரன் வாரமஞ்சரி

என்றும் வாழும் ஜீவா

மேலிருந்தும் மேலான செய்யாதார் சிறியவர்  
கீழிருந்தும் கீழான செய்யாதார் பெரியவர் எனும் 
வள்ளுவர் வாக்கு வழி நல் வாழ்வு வாழ்ந்து 
தெள்ளுதமிழ் வளர்த்து தேசிய விருது பெற்றவர்  
மணங்கமழும் மல்லிகை சஞ்சிகையைச் சுமந்து  
சனங்கள் வாழுகின்ற வீதியெங்கும் விற்றவர் 
மனுக்குலத்தார் உறவில் மனங்களை அறிந்து 
அனுபவப் பயணமெனும் ஆரமதைத் தொகுத்தவர் 
சாலையின் திருப்பம் வாழ்வின் தரிசனங்கள்  
தந்தவர் தண்ணீரும் கண்ணீரும் பாதுகை 
முப்பெரும் தலைநகரில் முப்பது நாட்கள் என 
அப்போதளித்தாரே அழகுறு கதைத் தொகுப்பை 
சாதிக்கு அடிகொடுத்த பாரதியின் வழி பற்றி 
சாதனைகள் பல புரிந்து சாதித்துக் காட்டியவர் 
வேதனைச் சுவடுகளை எழுத்துருவில் வடித்து 
சாகித்ய ரத்னா புகழ் விருதும் பெற்றவர் 
எழுத்துலகில் கொடிகட்டி உலகப்புகழ் பெற்ற 
பழுத்த எழுத்தாளன் பாரைவிட் டகன்றாலும் 
வடித்த எழுத்தென்றும் வாழும் உலகினிலே 
படித்து இன்புறுவோம் பார்போற்றும் ஜீவாவை! 

தம்பிலுவில் ‘ஜெகா’

Comments