HNB உடன் இணைந்து Steorra லோயல்டி திட்டத்தை வெளியிட்டுள்ள Sterling ஒட்டோமொபைல் | தினகரன் வாரமஞ்சரி

HNB உடன் இணைந்து Steorra லோயல்டி திட்டத்தை வெளியிட்டுள்ள Sterling ஒட்டோமொபைல்

பராமரிப்புக்கு பின்னரான உத்தரவாதத்தை அறிமுகப்படுத்திய ஒட்டோமொபைல் துறையில் முன்னோடி நிறுவனமான Sterling Automobiles Lanka, முன்னணி வங்கியான Hatton National Bank (HNB) உடன் இணைந்து ளுவநழசசய லோயல்டி திட்டம் என்ற எண்ணக்கருவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கையில் முதன்முறையாக, Sterling Automobiles நிறுவனம் HNB வங்கியுடன் இணைந்து வாடிக்கையாளர்கள் தமது Steorra லோயல்டி திட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட புள்ளிகளை, வங்கி வழங்கும் Sterling - HNB இணைந்த வர்த்தகநாமத்துடன் கூடிய டெபிட் அட்டை மூலம் பணமாக மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.

மேலும், வாகன பற்றரி, ஓடியோ, டயர்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்பு விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட ஒட்டோமொபைல் தொடர்பான சேவை வழங்குநர்களுடனும், தள்ளுபடிகள், சலுகைகள் போன்ற மேலதிக நன்மைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக குத்தகை மற்றும் காப்புறுதி நிறுவனங்களுடனும் Sterling கைகோர்த்துள்ளது.

Steorra லோயல்டி திட்டத்தின் பொறிமுறையானது, Sterling பராமரிப்புக்குப் பின்னரான நிலையங்களில் இருந்து சேவைகளைப் பெறும் ஒரு வாடிக்கையாளர் இந்த திட்டத்திற்கு பதிவு செய்ய விரும்பினால், அவர் HNB சேமிப்பு கணக்குடன் இணைக்கப்படும் HNB-Sterling இணைந்த வர்த்தகநாமத்துடன் கூடிய டெபிட் அட்டையை தெரிவு செய்யும் வாய்ப்பு அல்லது பல நன்மைகளைக் கொண்ட Steorra லோயல்டி அட்டையைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப்பெறுவார்.

இத்திட்டத்திற்கு பதிவுசெய்தவர்கள் Sterling பராமரிப்புக்கு பின்னரான நிலையத்தின் தற்போதைய வாடிக்கையாளர் தளம் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள், இதுவரை அவர்கள் பெற்றுள்ள சேவைகளின் அடிப்படையில் வெள்ளி, தங்கம் மற்றும் பிளாட்டினம் ஆகிய மூன்று லோயல்டி வகைகளில் ஒன்றினுள் உள்ளடக்கப்படுவர்.

Comments