அஜித்தின் ‘வலிமை’ புதிய சாதனை! | தினகரன் வாரமஞ்சரி

அஜித்தின் ‘வலிமை’ புதிய சாதனை!

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் பவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை.

இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.

இப்படத்தைமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்திற்கு இதுவரை அப்டேட் வரவில்லை என அஜித் ரசிகர்கள் தினம்தோறும் இயக்குநரிடமும் தயாரிப்பாளர் போனி கபூரிடமும் கேட்டு வருகின்றனர்.

ஆனால் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதால் இதற்கான அப்டேடுகள் வருவதில் தாமதமாகிறது.

இந்நிலையில் தற்போது இணையதளத்தில் ஒரு முக்கிய தகவல் வெளியாகிறது.

இதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டில் வலிமைப் படம் குறித்து டுவிட்டரில் அதிகம் டுவீட் பதிவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

Comments