பாட்டாளி வாழ்த்து! | தினகரன் வாரமஞ்சரி

பாட்டாளி வாழ்த்து!

அடிமை சாசனத்தின்  
அரையாடை அணிந்து  
புதையுண்டிருக்கும்  
முழிபிதுங்கிய மேனியான்  
கரு நிறச் சமானமாய்  
பறை கொட்டும்  
மலையிசைக் கிடப்போன்  
மலை நறு நிலத்திற்கு  
மறு அருள் புரிந்தோன்  
மாக்ஸின் உண்மை  
எனச் சில உத்தமர்  
பொருளாலே உணர்த்தி  
உணராத பலவழி பரவிடும்  
பஞ்சமர் கூட்டம் ஒன்றே  
அதனியல் அழிக்கும் உலகத்  
தொழிலாளன் அறிவோம்  
அதனிலை கண்டு ஏகாதிபத்திய  
எல்லையை அறுத்து பொதுவுடமை  
வாழ்வு எய்துவோம்  
வெல்க விவசாயிகள் போராட்டம்

எஸ். பிரேம்குமார், பொகவந்தலாவை    

Comments