நான் விஜய்யுடன் மோதுகிறேனா? | தினகரன் வாரமஞ்சரி

நான் விஜய்யுடன் மோதுகிறேனா?

விஜய்யின் 'தளபதி 65' படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இது குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.

'மாஸ்டர்' படத்தை அடுத்து விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

விஜய்க்கு வில்லனாகும் அஜித் பட வில்லன்? இந்நிலையில் தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்குமாறு அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று தகவல் வெளியானது. என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் வில்லனாக நடித்து மிரட்டிய அருண் விஜய் தற்போது ஹீரோவாக கவனம் செலுத்தி வருகிறார்.

அப்படி இருக்கும் போது அவர் விஜய்க்கு வில்லனாக சம்மதிப்பாரா என்று கேள்வி எழுந்தது. மேலும் மாஸ்டர் படத்தில் கோலிவுட்டின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியே விஜய்க்கு வில்லனாக நடித்ததால், அருண் விஜய்யும் சம்மதிப்பார் என்று பேச்சு கிளம்பியது. ஆனால் அப்படி எதுவும் நடக்கப் போவது இல்லை.

தளபதி 65 படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்கவில்லை என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் விஜய்க்கு வில்லன் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

மாஸ்டரில் வில்லன் விஜய் சேதுபதி தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவிட்டார். அதனால் தான் விஜய்யின் அடுத்த பட வில்லனை தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள். தளபதி 65 படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது.

படத்தை தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக வெளியிட முடிவு செய்துள்ளனர். மாஸ்டரை அடுத்து தளபதி 65 படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். தளபதி 65 படத்தை அடுத்து விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப் போகிறாராம்.

Comments