இலங்கையில் அதிகம் போற்றப்பட்ட காப்புறுதி நிறுவனமாக செலிங்கோ லைஃப் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையில் அதிகம் போற்றப்பட்ட காப்புறுதி நிறுவனமாக செலிங்கோ லைஃப்

முகாமைத்துவக் கணக்காளர்களுக்கான பட்டய நிறுவனத்துடன் (Chartered Institute of Management Accountants - CIMA) இணைந்து இலங்கை சர்வதேச வர்த்தகச் சம்மேளனம் (International Chamber of Commerce Sri Lanka - ICCSL) 2019-20 காலப்பகுதிக்காக அறிவித்த இலங்கையில் அதிகம் போற்றப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில், கெளரவக் குறிப்பு (Honourable Mention) என்ற கெளரவம், செலிங்கோ லைஃப் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் ஆயுள் காப்புறுதியின் முன்னோடியான செலிங்கோ லைஃப் நிறுவனம், மதிப்புமிக்க இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளமை இது இரண்டாவது தடவையாகும். அதேபோல், முதல் 10 நிறுவனங்கள், கெளரவக் குறிப்பு ஆகியவற்றில் இடம்பெற்ற நிறுவனங்களில் ஒரேயொரு காப்புறுதி நிறுவனமாக, செலிங்கோ லைஃப் மாத்திரமே இடம்பிடித்துள்ளது. 

பட்டியற்படுத்தப்பட்ட, பட்டியற்படுத்தப்படாத நிறுவனங்களுக்கு வழங்கப்படும் இந்த அதிகம் போற்றப்பட்ட நிறுவனங்கள் என்ற விருது, நிதியியல் செயற்பாடுகளின் அடிப்படையில் மட்டுமல்லாது பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், பணியாளர்கள், ஒட்டுமொத்தச் சமுதாயம் என அனைவருக்கும் ஏற்படுத்தும் பெறுமதியின் அடிப்படையில் ஏனைய நிறுவனங்களை விடச் சிறந்த நிலையில் காணப்படுவதற்காக வழங்கப்படுகிறது என, இவ்விருதை வழங்குவோர் தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியான பெறுபேறுகள், வல்லமை, பேண்தகு வளர்ச்சி, அதிசிறப்பான வணிக அடைவுகள் ஆகியவற்றை இவ்விருது அங்கீகரிக்கிறது. 

ஒருங்கிணைக்கப்பட்ட வருமானமான 32.1 பில்லியன் ரூபாய், இலங்கையின் ஆயுள் காப்புறுதியின் முன்னிலை நிறுவனமாக 16ஆவது தொடர்ச்சியான ஆண்டாகவும் செலிங்கோ லைஃப் நிறுவனத்தை நிலைநிறுத்திய மொத்தக் காப்புறுதி வருமானமான 18.7 பில்லியன் ரூபாய், நிகர இலாபமாக 6.7 பில்லியன் ரூபாய், முதலீட்டுப் பட்டியலாக 116.9 பில்லியன் ரூபாய், மொத்தச் சொத்துக்களின் பெறுமதியாக 133.2 பில்லியன் ரூபாய் என, செலிங்கோ லைஃப் நிறுவனம் 2019ஆம் ஆண்டை தனக்கேயுரிய உறுதியான வகையில் நிறைவுசெய்திருந்தது.  

Comments