இலங்கையின் சந்தையில் Infinix, Hot 9 Play புதிய கையடக்கத் தொலைபேசிகள் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் சந்தையில் Infinix, Hot 9 Play புதிய கையடக்கத் தொலைபேசிகள்

Infinix என்பது, முன்னணி இணைய தளம் மூலம் செயற்படும் ஒரு ளுஅயசவிாழநெ வர்த்தகப் பெயராகும். இது, இன்றைய இளைய தலைமுறையினரைக் கருத்திற்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அது, அண்மையில் தமது மிகப் புதிய Smartphone வகையான Hot 9 Play யினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கையடக்கத் தொலைபேசியானது, அழகிய, நேர்த்தியான மற்றும் நடுத்தர சந்தையை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். இது சிறந்த செயல் அம்சங்களைக் கொண்டுள்ள அதேவேளை, நியாயமான விலையுடன், அழகிய தோற்றத்தையும் கொண்ட கையடக்கத் தொலைபேசியாகும். 

இளம் சந்ததியினரை மையமாகக் கொண்டு 2013 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, செயற்பட்டு வரும் Infinix Mobile என்பது, ஒன்லைன் மூலம் செயற்படும் முன்னணி ஸ்மாட் போன் வர்த்தகப் பெயர் ஒன்றாகும். ‘எதிர்காலம் இன்றே’ என்ற, வர்த்தகப் பெயரின் தொனிப் பொருளின் அடிப்படையில், தமது வாடிக்கையாளர்களை ஏனையோரிடமிருந்து முன்னிலைப்படுத்தி, அவர்களின் பெறுமதியை உலகிற்கு எடுத்துக்காட்ட உதவும் ஒரு உற்பத்தியாகும். Infinix எப்போதும் மிகப் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் அதேவேளை, அழகிய, நாகரீகமான வடிவங்களில் உற்பத்திகளைப் பெற்றுக்கொடுத்து, தமது வாடிக்கையாளர்களை அதிநவீன நாகரீகத்தில் இற்றைப்படுத்தியுள்ளது. Infinix இன் உற்பத்திக் கோவையில் ZERO, NOTE, HOT, S மற்றும் SMART ஆகிய ஐந்து முக்கிய உற்பத்திகள் உள்ளன.

தமது வடிக்கையாளர்களுக்கு மிகப் புதிய தொழில்நுட்பத்தை தம் வசப்படுத்திக் கொள்ளவும், மதிநுட்பமான வாழ்க்கை முறை ஒன்றைக் கொண்டு செல்வதற்கான அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கவும் உதவுவதோடு, உலகெங்கிலுமுள்ள 30 க்கும் மேற்பட்ட நாடுகளில், முக்கியமாக ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் தென் கிழக்காசியா ஆகிய பிராந்தியங்களில் தமது விஸ்தரிப்பை மேற்கொண்டுள்ளது. 

Comments