உலகில் உச்சத்திலிருக்கும் 5 ஆரோக்கிய உணவுகள் | தினகரன் வாரமஞ்சரி

உலகில் உச்சத்திலிருக்கும் 5 ஆரோக்கிய உணவுகள்

நமது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் ஐந்து வகையான ஆரோக்கிய உணவுகளைப் பட்டியலிட்டுள்ளார்கள்.  

பிறந்துள்ள இந்த புத்தாண்டிலாவது நாம் நல்ல சத்தான உணவுகளை உட்கொண்டு நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ள இந்த உணவுப் பட்டியலை கைக்கொள்ளலாம்.  

அறிஞர்கள் தயாரித்துள்ள இந்த போஷணையான உணவுப் பட்டியலில் முதலிடம் பெறுவது பாதாம் பருப்பு. இதில் அபரிமிதமான சத்துக்கள் நிறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஊட்டச்சத்து மிகுந்த இந்த பாதாம் பருப்பில் நமது ஆரோக்கியத்தைக் காப்பாற்றத் தேவையான புரோட்டின், முக்கிய தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன.  

வழக்கமாக பாதாம் பருப்பைச் சாப்பிடுவது ஆரோக்கியமான இதயத்தைப் பராமரிக்கவும் நீரிழிவைக் கட்டுப்படுத்தவும் உதவும். சத்துமிக்க இந்த உணவுகளுக்கான பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பது சித்தாப்பழம் (அன்னாமின்னா). அறிந்த வகையில் இது மிக அருமையான சக்கரைச் சத்து, விற்றமின்கள், பொட்டாசியம் மிகுந்த இந்தப் பழம் அவ்வளவு ருசியானது.  

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் பட்டியலில் மூன்றாவது நான்காவது இடத்தை மீன்கள் பிடித்துள்ளன. கடலடியில் வாழும் இந்தவகை தட்டையான மீன்கள் கொழுப்புச் சத்துக் குறைந்தவையாகும். அவற்றில் பல்வேறு தாதுப் பொருட்கள், விற்றமின்கள், புரதச்சத்து என்பவை அதிகமாக உள்ளன. போஷணையான இந்த உணவுப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருப்பது சியாசீட்ஸ் என்றழைக்கப்படும் சியா விதைகளாகும்.  

இது பார்ப்பதற்கு சிறந்த தோற்றம் இல்லையென்றாலும் ஊட்டச்சத்து மிகுதியால் பவர்ஹோஸ் (Power Horse) என அழைக்கப்படுகிறது.  

இதில் நார்ச்சத்து அதிகமிருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது. சியா விதைகளில் தாதுப் பொருட்கள், விற்றமின் B மிகவும் அதிகம். சலட் மீதும் ஏனைய உணவுகளோடும் சேர்த்து இந்த சியா விதைகளை உணவாகக் கொள்ளலாம்.  
அருமையான உணவுப் பொருட்கள் எப்போதும் அதிக நன்மைகள் நிறைந்தவையாக உள்ளன. எனவே, இத்தகைய உணவுகளைத் தேடிக் கண்டுபிடித்து உண்டு நமது ஆரோக்கியத்தைப் பேணிக் கொள்வோம்.  

ஏ.எச். அப்துல் அலீம்,  
அலிகார் தேசிய கல்லூரி,  ஏறாவூர்.   

Comments