உடல் நலம் பேணுவோம் | தினகரன் வாரமஞ்சரி

உடல் நலம் பேணுவோம்

உடலிலிருந்து கழிவாகி வெளியேறும் எந்தப் பொருளும் உடலின் மீது தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவை உடனே கிருமிகளாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு முறையாகிலும் வெந்நீரிலோ அல்லது தண்ணீரிலோ குளிக்கவேண்டியது மிகவும் அவசியம். மலபந்தம் (constipation) அஜீரணம் ஏற்படாமல் பாதுகாப்பது உடல் நலத்தைப் பேணும் வழிகளில் மிக முக்கியமானது.

நோயற்ற உடலில்தான் அறிவு திறன்பட இயங்கும். இயற்கை இன்பங்களைத் துய்க்க இயலும். எனவே ஒவ்வொருவரும் நோயற்று வாழ வழிகண்டு நின்று ஒழுகி வாழவேண்டும். எதிலும் எங்கும் அளவுமுறை காப்போம். எண்ணம், சொல், செயல்களை விழிப்புணர்வோடு கையாளுவோம். உடற்பயிற்சி தவறாமல் செய்வோம். உடல் நலத்தைப் பேணுவோம்!

சோ. வினோஜ்குமார்,
தொழில்நுட்ப பீடம்,
யாழ். பல்கலைக்கழகம்

Comments