தோமஸ் அல்வா எடிசன் | தினகரன் வாரமஞ்சரி

தோமஸ் அல்வா எடிசன்

தோமஸ் அல்வா எடிசன் அமெரிக்காவிலுள்ள மிலான் நகரில் 1847ம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதியன்று பிறந்தார். தந்தை சாமுவேல் எடிசன் ஓர் அமெரிக்கர். தாயார் நான்சி ஸ்கட்டிஷ் பரம்பரையில் வந்த கனடாவைச் சேர்ந்த பெண்மணி. அவர் பள்ளிக்கூட ஆசிரியை. இவர்கள் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஏழாவது பிள்ளையாக எடிசன் பிறந்தார்.

சிறுவயதிலேயே அவருக்கு காது கேட்கும் திறன் பாதித்திருந்தது.  

எடிசன் எதற்கெடுத்தாலும் அது ஏன்? எப்படி என கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பார். சிறு வயது முதல் யார் எதைச் சொன்னாலும் அப்படியே நம்பாமல் அதை ஆராய்வதையே நோக்காகக் கொண்டிருப்பார். இந்த பண்பினால் தான் பிற்காலத்தில் பிரபல புகைப்படக்காரரான மைப்பிரிட்ஜ் இயக்கும் படமெடுப்பது சாத்தியமில்லை என்று கூறியபோது தீவிர ஆய்வில் ஈடுபட்டு கினடாஸ்கோப்பை கண்டுபிடித்தார்.  

சிறுவயது முதலே அறிவியல் மேதைகளின் நூல்களை கற்கத் தொடங்கினார். மைக்கல் பரடேயின் பத்திரிகையில் இருந்த மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் பகுதியை ஆழ்ந்து படித்ததன் மூலம் செய்கை முறையில் பரிசோதனைகளைச் செய்யும் திறனை பெற்றார்.  

மின்குமிழ், டெலிகிராப் சிஸ்டம், ரேடியோ வேல்வ், எலக்ரிக் ஜெனரேட்டர், கிராமஃபோன், மூவி கெமரா போன்றவை அவரது கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்கவை.  

தோல்வியை வெற்றியாய் மாற்றி அளப்பரிய பல கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரரான எடிசன் தனது 84ஆவது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.  

எம்.என். நூரா நிஸாம், 
தரம் 11, க/ தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி, 
தெல்தோட்டை.   

Comments