கொரோனா தாக்கம் | தினகரன் வாரமஞ்சரி

கொரோனா தாக்கம்

பாதிக்கப்பட்ட கற்றலை மேம்படுத்துவது எவ்வாறு..?

1. வீடுகளை வகுப்பறையாக்குவோம்
பாடசாலைகள் மூடப்பட்டாலும் கற்றலுக்கான வாய்ப்புகள் மூடப்படவில்லை. எனவே  வீட்டில் ஓர் அறையை வகுப்பறையாக்குவோம். கற்பதற்கான மேசை, வெண்பலகை  என்பவற்றை ஏற்பாடு செய்துகொள்வோம்.

2. நேர அட்டவணையுடன் கற்றலை தினமும் வீட்டில் மேற்கொள்வோம்
பாடசாலைப் பாடங்கள் ஒவ்வொன்றையும் சுயமாகக் கற்க ஆரம்பிப்போம். சுயகற்றலே  பிரதானமானது. ஆகவே நேரசூசிப்படி ஏற்கனவே கற்ற பாடங்களை மீட்டுவதோடு புதிய  பாடங்களையும் கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம். பாடநூல்களை வீட்டிலிருந்து  கற்பதற்கு பெற்றோர் வழிகாட்டலாம்.

3. அருகில் உள்ள கற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வோம்
வீட்டில் உள்ள பெற்றோர்கள் கற்றுக்கொடுக்கக் கூடியவர்களாக இருப்பின்  பெற்றோர்களிடமும் அல்லது மூத்த சகோதர சகோதரிகள் , உறவினர்கள் இருப்பின்  அவர்கள் மூலமாக சுயமாகக் கற்று விளங்க முடியாத விடயங்களை கற்றுக்கொள்ளலாம்.

4. பயிற்சிகளில் ஈடுபடுவோம்
கடந்தகால வினாத்தாள்கள், செயலட்டைகள், மாதிரி வினாத்தாள்கள் என்பவற்றை  பயன்படுத்தி கற்ற விடயங்களில் பயிற்சிகளில் ஈடுபடுவது அவசியமாகும். இதற்காக  https://www.tamilmesai.com , https://tamilkuruji.com  போன்ற இணையத்தளங்களில் மேற்சொன்ன விடயங்களை இலவசமாக டவுன்லோட் செய்ய  முடியும். அத்தோடு School Exam & Seminar Papers Grade 1-13, School  Exam & Seminar Papers போன்ற பல முகநூல் பக்கங்களினூடாகவும்  பெற்றுக்கொள்ள முடியும்.

5. பாடசாலையில் கற்றுத்தராமல் இருக்கும்  பாடங்களுக்காக திட்டமொன்றை அமைப்போம்.
பலம், பலவீனங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்த தவணைக்கான குறுங்கால கல்வி  இலக்குகளை தயார் செய்து குறுங்கால செயற்திட்டங்களை உருவாக்கி படிப்படியாக  அவற்றை நிறைவேற்றி வெற்றியை நோக்கி நகர முயற்சிப்போம்!

சோ.வினோஜ்குமார்,
தொழில்நுட்ப பீடம்,
யாழ்.பல்கலைக்கழகம்

Comments