நாடு முழுவதும் இன்று ஊரடங்கு; மீண்டும் 04, 05 ஆம் திகதிகளிலும் நாடளாவிய ஊரடங்கு | தினகரன் வாரமஞ்சரி

நாடு முழுவதும் இன்று ஊரடங்கு; மீண்டும் 04, 05 ஆம் திகதிகளிலும் நாடளாவிய ஊரடங்கு

நாடு முழுவதும் இன்று  ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளது.நேற்று சனிக்கிழமை இரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளை (01 ) திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிவரை அமுலிலிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, எதிர்வரும் ஜூன் 04 மற்றும் 05 ஆம் திகதிகளிலும் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி ஜூன் 03 ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு அமுலுக்கு வரும் ஊரடங்கு 06 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிவரை அமுலிலிருக்கும். நாளை ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 03 ஆம் திகதி புதன்கிழமை வரை வழமைபோன்று, தினமும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 04 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஜூன் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம், பொசன் பண்டிகையை முன்னிட்டே இரு தினங்களும் அமுலாகிறது.

இதனையடுத்து, எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை, தினமும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 04 மணி வரை ஊரடங்கு அமுலாகுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது தெரிந்ததே.

Comments