கொரோனா வைரஸின் அரசியல்; உயிரியல் ஆயுதப் போரின் ஆரம்பமா? | தினகரன் வாரமஞ்சரி

கொரோனா வைரஸின் அரசியல்; உயிரியல் ஆயுதப் போரின் ஆரம்பமா?

உலகை உலுக்கிவரும் கொரனோ வைரஸ் நாடுகளுக்கிடையே அதிகாரப் போட்டியையும் நட்புறவையும் பரஸ்பரம் ஒத்துழைப்பினையும் உருவாக்க முயலுகின்ற தோற்றப்பாட்டை கண்டு கொள்ள முடிகிறது. சீனாவில் தொடங்கியதாக உலகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டாலும் இது அமெரிக்காவிலே ஆரம்;பமாகியதற்கு தெளிவான ஆதராங்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் பொருளாதார வளர்ச்சியையும் அதன் மூலம் அது ஏற்படுத்திவரும் அரசியல் ரீதியான எழுச்சியையும் கட்டுப்படுத்தும் விதத்தில் நிகழ்ந்திருக்கலாம் என்ற கருத்து நிலை பெறுமளவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை ஆரம்பத்தில் அல்யசீரா தொலைக்காட்சிச் சேவை முதன்மைப்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்திய ஊடகங்களும் ஈரானிய ஊடகங்களும்  அதிக முக்கியத்துவம் வழங்கிவந்தன. சீனர்கள் அவற்றுக்கு பிந்திய காலத்திலேயே தம் மீதான அமெரிக்க -இஸ்ரேலிய கூட்டு சதி பற்றிய உரையாடல்களை அம்பலப்படுத்த ஆரம்பித்தனர். இக்கட்டுரையும் சீன-அமெரிக்க உயிரியல் போருக்குள் உலகம் அகப்பட்டுள்ளது என்பதை தேடுவதாக அமையவுள்ளது.

முதலில் கொரனோ வைரஸி;ன் உருவாக்கத்தை அமெரிக்காவே ஏற்படுத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டை ஏன் சீனா முன்வைகிறது என்பதை அவதானிப்பது பொருத்தமானது.

சீனாவின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் டிசாவோலிஜியன், வுஹானுக்கு தொற்றுநோயைக் கடத்தியவர்கள்; அமெரிக்க இராணுவத்தினரே என்ற குற்றச்சாட்டை தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டார். அதற்கு ஆதாரமாக அவர் முன்வைத்த முக்கிய விடயம்; கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் அமெரிக்காவின் 300க்கும்  மேற்பட்ட அமெரிக்க இராணுவத்தினர் இராணுவ விளையாட்டு தொடர் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சீனாவின் வுஹான் மாகாணத்திற்கு வருகை தந்திருந்தனர். அதற்கு பின்பே சீனாவில் கொரோனாவைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். அமெரிக்க இராணுவத்தினரின் சீன வருகை கொரோனா வைரஸ் பரவுகை தொடர்பில் தாக்கம் செலுத்தியுள்ளது என்ற கருத்தினை முன்வைத்தார். அக்காலப்பகுதியில் 2019இல் ஜோன் ஹொப்கின்ஸ், மற்றும் உலக பொருளாதார பேரவை ஆகியன இணைந்து அபாயமான ஒரு வைரஸ் பரவுவது தொடர்பில் முன்னெச்சரிக்கை அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது. இவற்றை விட முக்கிய ஆதாரமாக அமெரிக்டகாவின் நோய்த்தடுப்பு பிரிவின் அதிகாரி செனற்றுக்கு வழங்கிய அறிக்கையில் தெரிவித்த விடயம் கவனிக்கத் தக்கதாகும். கடந்த காலத்தில் அமெரிக்காவில்   பல மரணங்கள் நிகழ்ந்தன. அத்தகைய மரணங்கள் அனைத்தையும்  இயல்பான காய்ச்சலால் ஏற்பட்ட மரணங்களாகவே கருதினோம். ஆனாலும் அவை கொரோனா வைரஸ்ஸால் ஏற்பட்டுள்ளது என்ற எண்ணத்தையே தந்துள்ளது. இந்த மரணங்கள் கடந்த ஐந்து மாதங்களுக்குள் நிகழ்ந்துள்ளன. அத்தகைய மரணங்கள் 16000 தாண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.

இரண்டாவது விடயம் கொரோனா தொற்று பரவியுள்ள நாடுகள் அனைத்தும் சீனாவின் ஆதரவு நாடுகள் என்ற பார்வை வலுத்துள்ளது. குறிப்பாக ஈரானில் அதிக பரவலும் உயிரிழப்புகளும் நடந்துள்ளன. அதில் கொல்லப்பட்ட ஈரானின் சுப்ரீம் லீடர் அலிகாமினியின் ஆலோசகர் 78 வயதான அயதுல்லா ஹஷேம் பதாயிகோல் ;பாயேகனியும் அடங்குவார். அதனை விட ஈரானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 23 பேருக்கு இந் நோய்த் தொற்று ஏற்பட்டு;ளளது. இவர்களில் சிலர் இறந்துமுள்ளனர். ஈரானின் தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை வகுப்பு குழுவின் முக்கியதஸ்தரான ஹெஷ் மதுல்லாபலா ஹத்பிஷேயும் அமெரிக்காவுக்கு எதிராக தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் பாம்பியோவும் கொரோனாவைப் பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகளைப் பரப்புகின்றனர். இது ஈரான் மற்றும் சீனாவுக்கு எதிரான ஒர் உயிர்க் கொல்லி பயங்கரவாதத் தாக்குதலாகும் என்றார்.

இத்தாலியைப் பொறுத்தவரை நிலைமை சீனாவை விட அதிகமானதாக மாறிவருகிறது. இத்தாலி ஐரோப்பிய நாடு மட்டுமல்ல கடந்த காலத்தில் சீனாவின் ஓரே சுற்று ஓரே பாதை எனும் திட்டத்தில் முதல் இணைந்து கொண்ட நாடாகவும் உள்ளது. ஜி-7 நாடுகளில் சீனாவுடன் வர்த்தக ரீதியில் அதிகம் ஒத்துழைக்கும் நாடாகவும் காணப்படுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான கருத்துநிலை கொண்ட நாடு என்பதை விடசீனாவின் எழுச்சிக்கு ஆதரவான நாடு என்ற வகையில் சுற்றுச் சூழல் மற்றும் சக்திவளம்  தொடர்பில் அதிக அமெரிக்க எதிர்ப்புவாதத்தை கொண்டுள்ள் நாடு என்ற வகையில் காணப்படுகிறது. அது மட்டுமன்றி இத்தாலி போன்று ஐரோப்பா முழுவதும் கொரோனா வேகமாகப் பரவுவதற்கு அடிப்படைக் காரணம் அந்த நாடுகளின் கட்டுபாடற்ற போக்கும் அதற்கான சட்டவரைபுகளும் அதீதமாக காணப்படுகிறதேயாகும். சீனாவில் கட்டுப்படுத்தியது போன்று ஐரோப்பாவில் ஏற்படுத்துவ கடினம். சுதந்திரமான வாழ்கை முறை மட்டுமல்ல தாராள பொருளாதாரப் பொறிமுறை ஏற்படுத்திக் கொடுத்துள்ள வாய்ப்புக்களும் சூழலும் நகர மயவாக்கமும் பிரதான பங்காக அமைந்துள்ளது. சீனா என்னதான் மாற்றங்களை கொண்டிருந்தாலும் அது இன்றும் இரும்புத் திரை அரசியலை தனது நாட்டுக்குள் பின்பற்றி வருகிறது. அதனால் அது விரைவாக கட்டுப்படுத்திவிட்டது.

எனவே இத்தகைய போக்கில் அமெரிக்காவும் சீனாவும் மோதலில் சிக்குண்டு உலக மனித சமூகம் சிதைவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேலிய உயிரியல் விஞ்ஞானி டேனி ஷோஹம் குறிப்பிடுவது போல் சீனா தயாரித்தாலும் சரி ரஷயர்;கள்; குறிப்பிட்டது போல் இது சீனாவையும் ரஷ்யாவையும் இலக்கு வைத்து தயாரிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டாலும் சரி விளைவு மனித சமூகத்திற்கானது. இதில் சிறிய வளம் குன்றிய நாடுகளது இருப்பும் அவற்றின் பொருளாதார வாழ்வும் மிக ஆபத்தான கட்டத்திற்கு நகர்ந்து வருகிறது. இறைமை உரிமை சுதந்திரம் என்ற உரையாடல் அனைத்தும் கலாவதியாகி அடிமைத் தனத்தை நோக்கி உலகத்தை கொரோனா உருளவைத்துள்ளது. அதற்கு மூலமான தேசங்கள் இந்த நாடுகளுக்கு ஏற்பட்ட இழப்புகளையும் அழிவுகளையும் சரி செய்யுமா? அதற்கு சாட்சியாக உலக அமைப்பு செயல்படுமா?. என்பது பிரதான கேள்வியாகும்.  பொருளாதார சுமையினால் திண்டாடிவரும் தேசங்கள் கொரோனாவினால் முற்றாகவே அழிவு நிலைக்கு உள்ளாகிவருகின்றன. இதிலிருந்து அந்த நாடுகளையும் மக்களையும் மீட்கும் எந்த உத்தியும் உலக அமைப்புக்களாலோ அரசுகளாலோ ஏற்படுத்த முடியாதுள்ளது.

ஏற்கனவே அணுவாயுதத்தினாலும் ஏவுகணைகளாலும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் குண்டுகளாலும் உலகத்தினை தகர்த்த வல்லரசுகள் மீண்டும் தமது உயிரியல் ஆயுதங்களால் உலகத்தை அச்சுறுத்தி வர ஆரம்பித்துள்ளன. கொரோனா வெறும் நோயக் காவி மட்டும் கிடையாது அது ஒரு அரசியல் நோய்காவியாகும். அதன் விளைவுகளிலிருந்து மீள்வது மனித சமூகத்திற்கு கடினமான இலக்காக அமையும்.

கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்

Comments