‘நீடித்து உழைக்கும் வர்த்தக நாமம்’ விருதினை தனதாக்கிய சிங்கர் | தினகரன் வாரமஞ்சரி

‘நீடித்து உழைக்கும் வர்த்தக நாமம்’ விருதினை தனதாக்கிய சிங்கர்

சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி குழுமத்தின் தலைவர் மொஹான் பண்டிதகே, பிரதான நிறைவேற்று அதிகாரி மஹேஸ் விஜேவர்தன மற்றும் முகாமைத்துவ மற்றும் வர்த்தகநாம குழு, மதிப்புமிக்க மக்கள் விரும்புகின்றமிகச் சிறந்த வர்த்தகநாம விருதினை தொடர்ச்சியாக14ஆண்டாகவும்பெற்றுக்கொள்கின்றது.

SLIM-Nielsen மக்கள் தெரிவு விருதுகள் நிகழ்வில் தொடர்ந்து 14 ஆவது ஆண்டாக சிங்கர், இலங்கை ‘மக்கள் விரும்புகின்ற மிகச் சிறந்த வர்த்தகநாமம்’ஆக (People’s Brand of the Year) தெரிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு மேலதிகமாக,‘மக்கள் விரும்பும் நீடித்து உழைக்கும் வர்த்தகநாமம்' (People’s Durable Brand of the Year) விருதினையும் தொடர்ச்சியாக 14 ஆவது ஆண்டாகவும் தனதாக்கியதன் மூலம், நாடு முழுவதும் சந்தையில் அதன் தலைமைத்துவம் மற்றும் பல்லாண்டு காலமாக மக்கள் அதன் மீது வைத்துள்ள நம்பிக்கை ஆகியவற்றை மேலும் உறுதி செய்தது.

இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகம் (SLIM)ஏற்பாடுசெய்திருந்த,SLIM – Nielsen மக்கள் விருதுகள்மூலமாக, நுகர்வோரின் தெரிவுகள் பதிவு செய்யப்பட்டு, அதிகளவு தெரிவைப் பெற்ற நாமங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.பொது மக்கள் முன்னைய வருடத்தில் தமக்கு விருப்பமான நிறுவனங்கள், வர்த்தக நாமங்கள், நபர்கள், விளம்பரங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் போன்றவற்றை தெரிவு செய்யமுடியும்.

இதன் வெற்றியாளர்கள் நாடு முழுவதும் 15 – 60 வயதுக்குட்பட்ட, ஆண் மற்றும் பெண் இரு பாலார் உள்ளடங்கலாக 5000 பேரிடையே முன்னெடுக்கப்பட்டிருந்த கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். இக் கணக்கெடுப்பின் தனித்துவம் என்னவென்றால், மக்கள் தாம் விரும்பிய வர்த்தகநாமங்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதுடன், இதன் மூலம் நிச்சயமாக எந்த வர்த்தகநாமங்கள் அதிக நுகர்வோரைக் கொண்டிருக்கின்றன என்பதற்கான உண்மையான பிரதிபலிப்புக்கு வழிவகுக்கிறது.

“இலங்கையில் தொடர்ச்சியாக 14 ஆவது ஆண்டாக நம் நாட்டு மக்களால் வருடத்தின் முதன்மையான வர்த்தகநாமமாக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் பெருமைப்படுகிறோம். இந்த பாராட்டு சந்தேகத்திற்கு இடமின்றி இலங்கை நுகர்வோரின் நாடித்துடிப்பை பிரதிபலிப்பதுடன், எங்கள் வர்த்தகநாமமானது, 'நம்பகமான மேன்மை' என்ற அதன் வர்த்தகநாம வாக்குறுதிக்கு உண்மையாகவுள்ளதாக உணரப்பட்டு, அங்கீகரிக்கப்படுவதனை எடுத்துக்காட்டுகின்றது. எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன்.மேலும் எங்கள் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களை வாழ்த்தவும், பாராட்டவும் விரும்புகிறேன், " என சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சிகுழுமபிரதான நிறைவேற்று அதிகாரி, மஹேஸ் விஜேவர்தன தெரிவித்தார்.

சிங்கர், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயற்சிப்பதோடு,  தினமும் மில்லியன் கணக்கான இலங்கையர்களின் வாழ்க்கையைத் தொடும் ஒரு எழுச்சியூட்டும், பொறுப்புள்ள பெறுநிறுவன தலைவனாக தொடர்கின்றது.

“இது உண்மையிலேயே சிங்கரின் பாராட்டத்தக்க சாதனையாகும். இந்த விருதுகள் எங்கள் நிறுவனத்தின் விற்பனை வலையமைப்பு, சந்தைப்படுத்தல் திறன்கள், தயாரிப்பு வரிசை மற்றும் எங்கள் ஒட்டுமொத்த சேவைகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றமைக்கான சான்றாகும். எங்கள் நாட்டின் வாழ்க்கை முறைகளை மேம்படுத்தும் செயற்பாட்டினை நாம் கட்டமைத்து வருவதால், மிகச் சிறந்த தயாரிப்புகள், சேவைகள் மற்றும் அனுபவங்களில் சிறந்ததை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்,”என சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி இன்சந்தைப்படுத்தல் பணிப்பாளர், ஷனில் பெரேரா தெரிவித்தார்.

நாடளாவியரீதியில் பரந்துள்ள 430 இற்கும் மேற்பட்ட சிங்கர் விற்பனை மையங்கள் மற்றும் 2,800 முகவர்கள் மற்றும் அதற்கு ஈடாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விற்பனைக்குப் பின்னரான சேவை வலையமைப்புடன், இலங்கையில் மிகவும் பாரிய விநியோக வலையமைப்பினூடாக தனது வாடிக்கையாளர்களுக்கு பல வகையான உயர் தரமான சர்வதேச வர்த்தகநாமங்களை வழங்குவதில் சிங்கர் முன்னணியில் உள்ளது.  சிங்கரின் தயாரிப்பு வரிசையானது 600 வரையான இலத்திரனியல் சாதனங்கள், 1200 வீட்டு உபகரணங்கள் மற்றும் சர்வதேச ரீதியில் நன்கறியப்பட்ட 50 வர்த்தக நாமங்களைக் கொண்டுள்ளது.

Comments