எயார்டெல்லின் music streaming app இலங்கையில் அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

எயார்டெல்லின் music streaming app இலங்கையில் அறிமுகம்

எயார்டெல் லங்கா தனது music streaming app ஆன Wynk Music ஐ இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. இதனூடாக, பாவனையாளர்களுக்கு தமது ஸ்மார்ட்ஃபோன்களில் வரையறையற்ற மற்றும் பிரத்தியேகமான பாடல்களை கேட்டு மகிழ முடியும்.  இந்த app ஐ அன்ட்ரொயிட் தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இலங்கையில் புகழ்பெற்ற சிங்கள பாடகர்களின் 2500க்கும் அதிகமான சிங்கள பாடல்களையும் இந்த Wynk கொண்டுள்ளது.  

எயார்டெல் ஸ்மார்ட்ஃபோன் பாவனையாளர்கள் இந்த Wynk Music ஐ இலவசமாக பயன்படுத்த முடியும் என்பதுடன், வரையறையற்ற பாடல்களை கேட்கவும், பதிவிறக்கவும் (Download) முடியும். எயார்டெல் வாடிக்கையாளர்களுக்கு Wynk Music App இனூடாக பிரத்தியேகமான அனுகூலங்கள் பல கிடைக்கின்றன. இதில், பிரத்தியேகமான பாடல் பரிந்துரைப்பு, 14மொழிகளில் குரல் தேடல் வசதி போன்றன அடங்கியுள்ளன. 

2014இல் அறிமுகம் செய்யப்பட்ட Wynk Music என்பது, இந்தியாவில் பெருமளவு வரவேற்பைப் பெற்ற பாடல் app களில் ஒன்றாக அமைந்துள்ளது.

இதுவரையில் 120மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இதனை பதிவிறக்கவும் (Download) முடியும். இந்த app இல் ஒரு மாதத்தில் 1.5பில்லியனுக்கும் அதிகமான பாடல்கள் strem செய்யப்படுவதுடன், Google Playstore இல் காணப்படும் ‘Most Entertaining App 2018’ ஆகவும் தரப்படுத்தப்பட்டிருந்தது. 

இதன் மூலம் இலங்கையிலுள்ள எயார்டெல் வாடிக்கையாளர்கள் சிறந்த டிஜிட்டல் பாடல் அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், 3.5மில்லியனுக்கும் அதிகமான பாடல்கள் தெரிவிலிருந்து தமக்கு விரும்பிய பாடல்களை கேட்டு மகிழலாம். இதில் பிந்திய பொலிவுட் பாடல்கள் முதல், சர்வதேச பாடல்கள் மற்றும் உள்நாட்டு பாடல்களும் அடங்குகின்றன.  இந்த App இல் பன்மொழித் தெரிவுகள் காணப்படுவதுடன், பாவனையாளர்களுக்கு மிகவும் இலகுவாக கையாளக்கூடிய கட்டமைப்பாகவும் அமைந்துள்ளது. குரல் ஊடான தேடல் வசதி காணப்படுவதுடன், இணைய வானொலி, முன்னர் கேட்டு மகிழ்ந்த தெரிவுகளின் அடிப்படையிலான பரிந்துரைப்பு போன்றன வழங்கப்படுகின்றன.

 

Comments