மினுவாங்கொடை பள்ளிவாசலில் நல்லிணக்க வெசாக் | தினகரன் வாரமஞ்சரி

மினுவாங்கொடை பள்ளிவாசலில் நல்லிணக்க வெசாக்

தாக்குதலுக்குள்ளான மினுவாங்கொடை நகர ஜும் ஆப்பள்ளிவாசலில் இன்று நல்லிணக்க வெசாக் ஊடக கலந்துரையாடலொன்று நடைபெறுகின்றது.  

மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலியின் ஒருமைப்பாட்டு நிலையத்தின் அனுசரணையுடன் பள்ளிவாசல் நிருவாகம் இந்த வைபவத்தை ஏற்பாடு செய்துள்ளது.  இன்று பிற்பகல் 2 மணிக்கு மினுவாங்கொடை ஜும் ஆப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் நிகழ்வில், பிரதேசத்தைச் சேர்ந்த மகா சங்கத்தினர், கிறிஸ்தவ ஆலயங்களின் குருமார்கள். பள்ளிவாசல்களின் உலமாக்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.   மினுவாங்கொடையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதே இதன் பிரதான நோக்கமென ஏற்பாட்டாளரான ஹாஜி எம்.எஸ்.எம். கபீர் தெரிவித்துள்ளார்.   

எம்.ஏ.எம். நிலாம்  

Comments