வெசாக் | தினகரன் வாரமஞ்சரி

வெசாக்

புத்த பெருமானின் வாழ்வில் மூன்று பிரதான புனித நிகழ்வுகளை நினைவு கூரும் பண்டிகை

இந்தியாவில் புத்த பூர்ணிமா எனவும் இலங்கையில் வெசாக் எனவும் அழைக் கப்படும் பண்டிகையானது மே மாத பெளர்ணமி (முழு நிலா) நாளன்று உலகில் உள்ள அனைத்து பெளத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  

பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தர் பெருமானின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறுகின்றன. இக்காலப் பகுதியில் பந்தல்கள், தோரணங்கள், ஒளிக்கூடுகள் கட்டப்பட்டும் எங்கும் விழாக்கோலமாக இருக்கும்.  

இந்த நாள் மூன்று முக்கியத் துவங்களை கொண்ட நாளாக பெளத்தர்களால் கொண்டாடப் படுகின்றது.  

சித்தார்த்த கெளதமர் லும்பினி (இன்றைய நேபாளம்) என்னுமிடத்தில் பிறந்த நாள்.  

புத்தகயா எனும் இடத்தில் தவம் புரிந்து புத்த நிலை அடைந்த நாள்.  

புத்தர் இறந்த நாள்.  

இம் மூன்று நிகழ்வுகளும் மே மாத பூரணை நாட்களிலேயே நிகழ்ந்தன.  

கொண்டாட்ட முறைகளில் நாடுகளுக்கு இடையே சில வேறுபாடுகள் இருப்பதையும் அறிய முடிகின்றது.  

இலங்கையில் பெளத்த மக்களின் முக்கியமான பண்டிகை வெசாக் ஆகும்.  

வெசாக் தினமான மே மாத பெளர்ணமி நாளன்று புத்தரின் பிறப்பு, இறப்பு, விழிப்பு (பரி நிர்வாணம்) ஆகியவற்றை நினைவுறுத்தி மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.  

பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறுகின்றன. இக்காலப்பகுதியில் பந்தல்கள், தோரணங்கள், ஒளிக்கூடுகள் கட்டப்பட்டு எங்கும் விழாக்கோலமாக இருக்கும்.  

பெளத்த மக்களின் வீடுகளில் மூங்கில் மற்றும் ஈர்க்கில் குச்சிகளால் கூடுகள் செய்யப் பட்டு மெல்லிய கடதாசிகளினால் வடிவமைக்கப்பட்டு அதற்குள் மெழுகு வர்த்தியை ஏற்றி வீடுகளின் முன்னே உயரத்தொங்க விடுவர். இவை இலங்கையில் 'வெசாக் கூடு' என்று அழைக்கப்படுகின்றது. இந்த வெசாக் கூடுகள் பல்வேறு வடிவங்களில் இருக்கும். ஒவ்வொருவரும் தத்தமது கலைவண்ணத்தை இங்கே காட்டியிருப்பர்.  

இதைத் தவிர வீடுகளில் தொங்கவிடக் கூடிய சிறிய வகை வெசாக் கூடுகள் கடைகளில் விற்பனை செய்யப்படும். இக் காலப்பகுதியில் இவை அதிகம் விற்பனையாகும். இவைகளும் உள்ளே மெழுகுவர்த்தி ஏற்றி தொங்கவிடுபவைகள் தான். மின்சாரம் வழங்கப்படும் பிரதே சங்களில் மெழுகுவர்த்திக்குப் பதிலாக மின்விளக்குகளை கூடுகளின் உள்ளே தொங்கவிடுவர்.  

பிரதான சந்திகளில் மாபெரும் மின்னலங்காரத் தோரணங்கள் பல இலட்சங்கள் செலவில் கட்டப்படும். அத்தோரணங்களில் பெளத்த வரலாற்றுக் கதைகளை ஓவியமாக வரைந்து அதற்கு ஒலிபெருக்கியில் விளக்கங்கள் கவிதை வடிவிலும் பேச்சு வடிவிலும் கொடுக்கப்படும். இதனால் இந்தத் தோரணங்கள் கட்டப்பட்டிருக்கும் இடத்திற்கு பெருந்திரளான மக்கள் கூட்டம் பெருகும்.

 

Comments