சிங்கர் லங்கா பிஎல்சிக்கு செலான் வங்கியின் வர்த்தக லோயல்டி அட்டை | தினகரன் வாரமஞ்சரி

சிங்கர் லங்கா பிஎல்சிக்கு செலான் வங்கியின் வர்த்தக லோயல்டி அட்டை

செலான் வங்கி பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரட்ன, வர்த்தக லோயல்டி அட்டையின் மாதிரியை, சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹேஷ் விஜேவர்தனவிடம் கையளிக்கிறார். அருகில் இரு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் காணப்படுகின்றனர்.

பரிபூரண வங்கியியல் அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தனது சேவைகளை விஸ்தரிக்கும் செலான் வங்கி, வர்த்தக சேவைகளுக்கான லோயல்டி அட்டையை சிங்கர் (ஸ்ரீ லங்கா) பிஎல்சிக்கு அண்மையில் வழங்கியிருந்தது. 

துரித கதியில் வங்கிச் சேவைகளை பெற்றுக் கொடுப்பது பற்றி செலான் வங்கியின் வர்த்தக சேவைகள் திணைக்களம் கவனம் செலுத்தி வருவதுடன், அதற்காக முன்னுரிமை சேவை பிரிவையும் நிறுவியிருந்தது. சிங்கர் (ஸ்ரீ லங்கா) பிஎல்சி, சிறந்த 50வியாபார வாடிக்கையாளர்களில் ஒன்றாக திகழ்வதுடன், செலான் வங்கியின் இந்த முன்னுரிமைச் சேவையினூடாக விசேட சலுகைகள் மற்றும் அனுகூலங்களை பெற்றுக் கொள்ளும். 

வர்த்தக வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக 100க்கும் அதிகமான நாடுகளில் 500 க்கும் அதிகமான வங்கிகளுடன் செலான் வங்கி சர்வதேச வலையமைப்பைக் கொண்டுள்ளது. வங்கி தன்வசம் கொண்டுள்ள பெருவாரியான அனுபவம் மற்றும் தனது ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகளை வழங்கி, வாடிக்கையாளர்களுக்கு சரியான வழிமுறைகள் பற்றிய ஆலோசனைகளை பெற்றுக் கொடுப்பதனூடாக, வர்த்தக சேவைகள் பிரிவில் தனக்கென தனி நாமத்தை பதிவு செய்ய செலான் வங்கிக்கு முடிந்துள்ளது.

Comments