ஐ.பி.எல்: இன்று இறுதிப்போட்டி | தினகரன் வாரமஞ்சரி

ஐ.பி.எல்: இன்று இறுதிப்போட்டி

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று இரவு 7.30மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. 

ஐ.பி.எல். வெற்றிக் கிண்ணத்தை 3முறை வென்றுள்ள இரண்டு அணிகளும் இன்று இறுதிப் போட்டியில் மோதுகின்றன.   12ஆவது இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 20ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 23ஆம் திகதி தொடங்கி ஆட்டங்கள் கடந்த 5ஆம் திகதி முடிவடைந்தது.  

இதன் முடிவில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் முதல் 4இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறின. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ​ேராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் 5முதல் 8ஆவது இடங்களை பிடித்து வெளியேறின. 

‘பிளேப் ஆப்’ சுற்று கடந்த 7ஆம் திகதி ஆரம்பமாகியது. சேப்பாக்கத்தில் நடந்த ‘தகுதிகாண் முதலாவது ஆட்டத்தில் மும்பை அணி 6விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 

விசாகப்பட்டினத்தில் 8ஆம் திகதி நடந்த எலிமினேட்டர் போட்டியில் டெல்லி அணி 2விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை தோற்கடித்து வெளியேற்றியது. விசாகப்பட்டினத்தில் நேற்றுமுன்தினம் நடந்த தகுதிகாண் இரண்டாவது ஆட்டத்தில் சென்னை அணி 6விக்கெட்டில் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 

நேற்று ஓய்வு நாளைத் தொடர்ந்து இறுதிப் போட்டி இன்று இரவு 7.30மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.  இரு அணிகளுமே ஐ.பி.எல். கோப்பையை 3முறை வென்றுள்ளன. இதனால் 4ஆவது தடவையாக சாம்பியன் பட்டம் பெறப்போவது சென்னையா? மும்பையா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011, 2018 ஆண்டுகளிலும், மும்பை இந்தியன்ஸ் 2013, 2015, 2017 ஆண்டுகளிலும் ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளன. சென்னை அணி 8ஆவது முறையாகவும், மும்பை அணி 5ஆவது தடவையாகவும் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன. 

Comments