விழித் தாக்குதல் | தினகரன் வாரமஞ்சரி

விழித் தாக்குதல்

வீழ்த்திய  
விழிகளை  
உற்றுப் பார்க்கத்  
தயங்குகிறேன்  
தாக்கப்பட்ட  
மனது   
புழுவாய் துடிப்பதை  
உன் மனது  
புரிந்துகொள்ளும்வரை  
நிலைகொள்ளாமல்  
தவிக்கிறேன்  
கண்களின்  
காந்த சக்தி  
கண்ணாடி போன்ற  
உள்ளத்தை  
சிதறச் செய்யும்  
என்பதை கவிஞர்கள்  
சொல் அலங்காரத்துக்காக  
கூறுகிறார்கள்  
என்றுதான் நினைத்தேன்  
அநுபவம்  
பேசுகிற போதுதான்  
தெளிந்தேன்  
யதார்த்தத்தை  
கருங்கல்லை  
பிளந்துவிடும்  
சுத்தியலை விட  
விழிச்சுத்தியல்  
ஏற்படுத்தும்  
ஏற்படுத்தும்  
சிதறல்கள்  
காலத்தால்   
ஆழ்த்த முடியாத  
சுவடுகள் என்பதை  
நான் அறிந்தேன்  
தாக்கப்பட்ட  
என் இதயம்  
துடித்தபோதுதான்!  
 
அலிறிஸாப், அக்குறணை

Comments