தேர்தல்கள் ஆணைக்குழு அரசுக்கு 25 வரை காலக்​கெடு | தினகரன் வாரமஞ்சரி

தேர்தல்கள் ஆணைக்குழு அரசுக்கு 25 வரை காலக்​கெடு

பதிலின்றேல் உச்ச நீதிமன்றை நாடப்போவதாக அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் தீர்க்கமான முடிவினை எடுக்காவிட்டால், உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். 

தேர்தலை நடத்த துரித நடவடிக்ைக எடுப்பது தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் முடிவெடுப்பதற்கு எதிர்வரும் 25ஆம் திகதி வரை காலக்ெகடு வழங்கியிருப்பதாகத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் தேசப்பிரிய, தவறும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார். 

உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிற்கு அமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தாம் நடவடிக்ைக எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமல் இழுபறிபடுவது தொடர்பில் தாம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், அந்தக் கடிதங்களுக்கு எவரும் இதுவரை பதில் அளிக்கவில்லை என்று கூறினார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவான எல்லை மீள்நிர்ணயம் தொடர்பான அறிக்ைகயை விரைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைக்குமாறு தாம் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ள போதிலும் இதுவரை அது தொடர்பில் எந்த நடவடிக்ைகயும் எடுக்கப்படவில்லை என்று ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். 

இந்நிலையில், எதிர்வரும் 25ஆம் திகதி வியாழக்கிழமை வரை மாத்திரமே தம்மால் காத்திருக்க முடியும் என்றும் அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அவர் தெரிவித்தார். 

நாட்டின் ஒன்பது மாகாணங்களில் எட்டு மாகாண சபைகளின் ஆயுட்காலம் ஏற்கனவே முடிவடைந்துள்ளன.

அவற்றின் நிர்வாகப் பொறுப்புகளை ஆளுநர்கள் வகித்து வருகின்றனர்.

மற்றொரு சபையான ஊவா மாகாண சபை எதிர்வரும் ஒக்ேடாபர் மாதம் நிறைவடைகிறது.

இந்நிலையில் தேர்தலை மேலும் மேலும் தாமதப்படுத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும் திரு.மஹிந்த தேசப்பிரிய வாரமஞ்சரிக்குச் சுட்டிக்காட்டினார்.

(எம்.ஏ.எம்.நிலாம்)

 

 

Comments