அன்னதானம் உட்கொண்ட 42 பேர் ஆஸ்பத்திரியில் | தினகரன் வாரமஞ்சரி

அன்னதானம் உட்கொண்ட 42 பேர் ஆஸ்பத்திரியில்

கோயில் திருவிழாவின்போது வழங்கப்பட்ட அன்னதானம் உட்கொண்ட 42பேர் உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி, வயிற்றோட்டம் ஏற்பட்டு வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (19 ) இரவு 10மணியளவில் அனுமதிக்கப்படுள்ளனர்.  

மஸ்கெலியா நல்லத்தண்ணி லக்ஷபான பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின் எட்டாம் நாள் பூஜையின் போது அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை உட்கொண்டவர்களே இவ்வாறு பாதிப்படைந்து மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.  

07சிறுவர்கள், உட்பட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 42பேருக்கும் பாரிய பாதிப்புகள் இல்லை எனவும் உணவு ஒவ்வாமையினாலேயே வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.  

பாதிக்கப்பட்டவர்களில் 10பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், 03சிறுவர்கள், 21பெண்கள், 8ஆண்கள் என 32பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.  

இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகளும், நல்லதண்ணி பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

ஹற்றன் விசேட நிருபர்  

Comments