BOXIT - மீள்சுழற்சி செய்யக்கூடிய கப்பல் கொள்கலன் குடியிருப்பு வசதி: Landmark குழுமத்தினால் அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

BOXIT - மீள்சுழற்சி செய்யக்கூடிய கப்பல் கொள்கலன் குடியிருப்பு வசதி: Landmark குழுமத்தினால் அறிமுகம்

இலங்கையில் ஆதன இருப்பு துறையில் புதிதாக கால்பதித்துள்ள Landmark குழுமம், BOXIT எனப்படுகின்ற மீள்சுழற்சி செய்யப்படக்கூடிய கப்பல் கொள்கலன் குடியிருப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Landmark குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எக்சித் ஹபங்கம இது தொடர்பில் விளக்கமளிக்கையில்,கடந்த சில ஆண்டுகளில் குடியிருப்பு வசதியைப் பொறுத்தவரையில் தலா வீத சதுர அடி விஸ்தீரணம் அதிகரித்துள்ளது. இந்த சலிப்பூட்டுகின்ற மற்றும் அபத்தமான போக்கு கட்டாயம் மாற்றியமைக்கப்பட வேண்டும். எமது வாழ்க்கைமுறைக்கு ஏற்ற வகையிலும், சனத்தொகைக்கு ஏற்பவும் வீடுகள் நிர்மாணிக்கப்படல் வேண்டும். கடந்தகாலத்தைப் போலன்றி, மேற்குறிப்பிட்ட வகையில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு தற்போது எம்மத்தியில் பல மார்க்கங்கள், வழிமுறைகள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளன. மீள்சுழற்சி செய்யப்பட்ட கப்பல் கொள்கலன்களை உபயோகித்து நிர்மாணிக்கப்படுகின்ற சின்னஞ்சிறிய வீடுகள் என்ற எண்ணக்கருவானது சர்வதேச சமூகத்தின் மத்தியில் பாரிய அளவில் பிரபலம் அடைந்து வருவதுடன், Landmark குழுமம் இப்போக்கினை இலங்கையிலும் அறிமுகம் செய்வது பெருமகிழ்ச்சி அளிக்கின்றது என்றார். சந்தையின் எதிர்பார்ப்புக்களை விடவும், வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ற வகையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதே இந்த எண்ணக்கருவின் நோக்கமாகும். 20 அடி மற்றும் 40 அடி கப்பல் கொள்கலன்களை மீள்சுழற்சி செய்து BOXIT நிர்மாணிக்கப்படுவதுடன், அதனை அழகிய, முழுமையான தொழிற்பாடுகளைக் கொண்ட, நவீன குடியிருப்பு மற்றும் பணியக இட வசதிகளாக, 18-20 சதுர அடி விஸ்தீரணத்துடன் வாழ்வில் புது வசந்தத்தை சேர்ப்பிக்கின்றது. உலகளாவில் உபயோகிக்கப்படுகின்ற பல்லாயிரக்கணக்கான கப்பல் கொள்கலன்கள் ஆண்டுதோறும் பாவனையிலிருந்து அகற்றப்படுகின்ற நிலையில், சுற்றுச்சூழல் ரீதியாக இவை பேண்தகைமை கொண்டவையாக அமைந்துள்ளன.

BOXIT குடியிருப்பு தொகுதிகள் அனைத்தும் வாடிக்கையாளரின் தேவைகளின் அடிப்படையில் Landmark இன் உள்ளக வடிவமைப்பு அணியினால் எண்ணக்கருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்படுகின்றன. பாதுகாப்பு, கட்டமைப்பு நேர்மை மற்றும் அழகியல் ஈர்ப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் முகமாக, துல்லியமான தராதரங்களுடன் நிர்மாணிக்கப்படுகின்ற புத்தாக்கமான இட வசதிகளைத் தோற்றுவிப்பதற்கு அதிநவீன நிர்மாண மற்றும் வடிவமைப்பு தொழில்நுட்பங்களை இவ்வணி பயன்படுத்துகின்றது.

Comments