திரேசா மேயின் முயற்சி பிரித்தானியாவை பாதுகாக்குமா ? | தினகரன் வாரமஞ்சரி

திரேசா மேயின் முயற்சி பிரித்தானியாவை பாதுகாக்குமா ?

உலக அரசியலில் ஐரோ ப்பிய அனுபவம் எப்போதும் புதிய வகையானதாகவே அமைந்துள்ளது. பொருளாதார தேவைக்கானதொன்றாக ஐரோப்பிய யூனியன் அமைந்தாலும் அரசியல் சமூகத்தளத்திலும் வர்த்தக மற்றும் சந்தைக் கட்டமைப்பிலும் அதிக முன்னுரிமை பொருந்திய நிறுவனமாக விளங்குகின்றது. இதனால் அது தொடர்பான அரசியல் மீளவும் ஐரோப்பாவிலும் முழு உலகப்பரப்பிலும் அதிக பேசு பொருளாக மாறியுள்ளது. இதனை புரிந்து கொள்வதென்பதே ஐரோப்பிய அரசியல் போக்கினை உணர்ந்து கொள்ள உதவும்.

ஐரோப்பிய அரசியலில் அதிக காலம் பேசப்படும் ஒருவிடயமாக ஐரோப்பிய யூனியனது பிரித்தானிய வெளியேற்றம் தொடர்பான சர்ச்சை காணப்படுகிறது. சிறந்த பிரதமர் ஒருவரை இழந்ததுடன் ஆட்சியை நடாத்த முடியாத நெருக்கடிக்கு வித்தாக அமைந்துள்ளமை கவனிக்கத்தக்க அம்சமாகும். ஐரோப்பா பொது குடும்பமாக அமைந்தாலும் தமக்கிடையே போட்டியும் பூசலும் நிறைந்த தேசம் என்பதை மறுக்க முடியாது. பிரித்தானியாவின் வெளியேற்றத்தை மனதளவில் ஏற்றுக் கொள்ளும் நாடு என்றவகையில் பிரான்ஸ் காணப்பட்டது போல் ஜேர்மனி இத்தாலி என்பன வெளியேற்றத்தால் தமக்குள்ள போட்டித் தவிர்ப்பை மட்டுமல்ல தலைமைதாங்கும் ஆதிக்க உணர்வையும் தகர்க்க முடியுமென கருதுகின்றன. ஆனாலும் அடிப்படையில் பிறிட்ஸிட் விவகாரம் பித்தானியாவின் தனித்துவமானது என்று குறிப்பிட்டாலும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வெளியேற தயங்குவதாக தெரிகிறது. அது தவிர்கக முடியாத வர்த்தக மற்றும் அரசியல் சார் பிரச்சினையாக அமைந்துள்ளது.

தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் எண்ணத்தில் பிறிக்ஸிட் விடயத்திலிருந்து பிரித்தானியா விலகிக் கொள்ள மறுப்பதை உணரமுடிகிறது. அப்படியான முடிவினை இந்த மாதம் 29 ஆம் திகதி சாத்தியப்படுத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய உடன்பாடு குறிப்பிடுகிறது. அதனை தடுக்கவே இரண்டாவது வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு அதிலும் பெரும் தோல்வியை திரேசா மே அடைந்துள்ளார். ஏறக்குறைய 149 வாக்குகளால் தோற்றுள்ளது மே அரசாங்கம். ஆனாலும் மே பதவி விலகவில்லை. செயல்பாட்டில் தளர்வு ஏற்படவில்லை. தொடர்ச்சியாக முயன்று கொண்டே உள்ளார் மே என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் அவரது அரசாங்கத்தின் அங்கம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களே அவரது பிறிக்ஸிட் எதிராக வாக்களித்துள்ளனர். இது சற்று கடினமான இலக்கு என்பதையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விலகுவது தாமதிப்பது, அபாயமானது எனவும் ஜனநாயகத்திற்கான அவமானம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

பிரித்தானிய மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். பராளுமன்ற உறுப்பினர்கள் இரு தடவை நிராகரித்துள்னர். தொடர்ச்சியாக நிராகரிக்கும் மனோ நிலையோடு அந்த மக்கள் இன்னும் காணப்படுகின்றனர். அப்படியான சூழலில் கன்சவேட்டிவ் அரசாங்கமும் திரேசா மேயும் ஐரோப்பிய யூனியனைவிட்டு வெளியேற மறுப்பதற்கு காரணம் என்ன. அவை சாரணவையல்ல. மிக வலிமையானவை. அம்சங்கள் என்பதை புரிந்து கொள்ளுதல் அவசியமானது. பிரித்தானியாவைப் பொறுத்தவரை நீண்ட வரலாற்றை தனக்குள் கொண்டுள்ளது. அந்த வரலாற்றிலேயே உலக வரலாற்றின் நியமங்களும் பண்புகளும் காணப்படுவதுடன் நிலையான அரச வடிவத்தையும் அதிகார அலகையும் ஆதிக்கத்திற்கான பின்னணியையும் கொடுத்திருந்து. அத்தகைய அரசை நிலைகுலையச் செய்ய திரேசா மே ஒரு போதும் தயாராகமாட்டார். குறிப்பாக பிறிக்ஸிட் விடயத்தில் அயர்லாந்தும் ஐரிஸ் குடியரசும் ஏற்படப் போகும் நெருக்கடி பிரதான விடயமாகும் பொருளாதாரக் காரணியை விட அரசியல் ரீதியான இறையாண்மையே பிரதான அம்சமாகும். அதிலிருந்து மீளுவதில் என்றுமே பிரித்தானியா தயாராகவில்லை என்பது கவனிக்கத் தக்கது. இன்றைய உலக வலையமைப்பில் தனியான சுங்கம் ஒன்றை அமைப்பதுவும் அதன் மூலம் ஐரிஸ் குடியரசினது ஆட்சியை தனிமைப்படுத்துவதும் நிகழ்ந்துவிடும் எனப் பராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, பிரதமரும் அத்தகைய எண்ணத்தையே கொண்டிருக்கின்றார். அவரிடம் இரண்டு விடயங்களையும் ஓரே அளவில் கருதுவது தெளிவாக தெறிகிறது. அதாவது ஐரோப்பாவை விட்டு வெளியேறுவதல்ல பிரச்சினை. ஐரோப்பாவுடன் ஐரிஸ் குடியரசையும் அயர்லாந்தையும் இழந்துவிட வேண்டும் என்பதேயாகும். அதனை எப்படி சரி செய்வதென்பதே அவரது உண்மையான குழப்பமாகும். இதனை சரிசெய்வதற்காகவே தொடரான பேச்சுக்களும் வரலாற்று ரீதியான உரையாடலும் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார். மீண்டும் மீண்டும் வாக்கொடுப்பு நடாத்துவதும் தீர்வுக்கான உடன்படிக்கையை மேற் கொள்வதுவும் நிகழ்ந்து கொண்டிருகிறது. பொதுவாகவே பிரித்தானிய அரசியலில் மட்டுமல்ல உலகளாவிய தளத்தில் ஒரு அலகை இழத்தல் என்பது சவாலான விடயமாகவே அமையும். வரலாறு முழுவதுவும் அயர்லாந்து விடுதலை பற்றிய உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. எந்த அறிஞனும் அதற்கான விடுதலையை உறுதிப்படுத்த முடியவிலலை. அனைவரும் ஐரிஸ் விடுதலை சாத்தியமற்றது என்ற வாதத்தையே முன்வைத்திருந்தனர். ஆனால் இன்றைய சூழலில் அத்தகைய நிலை ஏற்பட்டுவிடுமா என்ற சந்தேகம் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கும் எதிர் தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ளது. அதனைச் சரி செய்வதற்காகவே ஒரு காலப்பகுதிக்கு தேவையான உடன்படிக்கையை ஐரோப்பிய யூனியனுடன் செய்துகொள்ள பிரித்தானியா முனைகிறது. அத்தகைய உடன்படிக்கைக்காக பாரிய விட்டுக் கொடுப்புகளை செய்ய மே அரசாங்கம் முயலுகிறது. அதனால் எதிர்க்கட்சியினர் வெற்றிகரமான அரசியலை நடாத்த முடியுமெனக் கூறிவிட முடியாது. அதற்காகவே அனைத்து கால தாமதத்தையும் எதிர்த்தரப்பு ஏற்றுக்கொள்ள முயலுகிறது.

இரண்டாவது முக்கிய விடயம் ஐரோப்பிய யூனியனது பொருளாதார பிரச்சினையும் பிரி-த்தானியாவின் நெருக்கடியுமாகும். இன்றய உலகப் பொருளாதாரம் வர்த்தக கட்டமைப்பிலும் சந்தைப் பொறிமுறையிலுமே தங்கியுள்ளது. அத்தகைய பொறிமுறையை தகர்ப்பதென்பது பிரித்தானியாவின் இருப்பையே தகர்ப்பதாகும். அதனால் ஒரு குறிப்பிட்ட காலம் உடன்பாட்டின் மூலம் அத்தகைய வாய்ப்புக்களை தக்கவைக்க முடியுமென்று கருதுகின்றது அரசாங்கம் உள்நாட்டில் விலையேற்றமும் தட்டுப்பாடும் அதிக இறக்குமதிக்கான வாய்ப்பும் ஏற்படுமென ஆளும் தரப்பு பிரச்சாரப் படுத்துகிறது. அது ஒரு வகையில் நியாயமானதாக அமைந்தாலும் பிரித்தானியா வாய்ப்பான சந்தையை இழக்கும் நிலையை அடைகிறது என்பது உணரக்கூடிய விடயமாகும். வாய்ப்பான சந்தையே இன்​ைறய பெருளாதாரமாகும்.

அதனை எல்லையோரத்தில் வைத்துக் கொண்டு செயல்பட முடியாத போக்கானது பொருளாதார ரீதியில் மட்டுமல்ல அரசியல் ரீதியிலும் அபாயமானதாகவே அமையும். வர்த்தக கட்டமைப்பபையும் ஏற்றுமதியையும் ஐரோப்பாவுக்குள் அறிமுகப்படுத்திய பிரித்தானியா வரியடிப்படையை இழந்து செயல்பட முனைவது அதன் இருப்புக்கு பாரிய சவாலாகவே அமையும். இதில் ஒன்று சந்தை வர்த்தக இழப்பீடு என்பது ஒருபக்கம் மறுபக்கத்தில் வரியடிப்படையிலான உறவை நோக்கிய நகர்வானது நிகழவுள்ளது. அதனை கையாளுவது வர்த்தக பரிமாணத்தில் அதிக சிக்கலுக்குரிய விடயமாகும்.

இத்தகைய குழப்பத்திற்கொல்லாம் அடிப்படையாக அமைந்திருப்பது பிரித்தானியத் தேசிய வாதமாகும். அது பிரித்தானியாவுக்கே உரிய விடயம் மட்டுமல்ல. ஐரோப்பா முழுவதும் எழுந்துள்ள அரசியல் மீள் சிந்தனையாகும். அது அமெரிக்காவுக்குள்ளும் அதிக அரசியல் மாற்றத்தை தந்துள்ளது. ஆனால் பிரித்தானியாவைப் பொறுத்தவரை நிலையான அரசியல் இருப்பையும் பொருளாதார உத்தரவாதத்தையும் ஏற்படுத்த விளைகின்ற தன்மையைக் காணக்கூடியதாக உள்ளது. மேலும் ஆட்சியாளர்களின் தந்திரோபாயத்தாலும் அரசியல் அனுபவத்தாலும் அத்தகைய போக்கினை சரிவரக் கையாளத் தலைப்பட்டுள்ளது. அதனை வெல்லத் தவறும் பட்சத்தில் பிரித்தானிய ஆட்சியிலும் கட்டமைப்பிலும் மாறுதல் நிகழும். அதற்கான அடிப்படைகளை பிரித்தானியா இயல்பாகவே கொண்டிருகிறது. ஒற்றையாட்சி அரசியலமைப்பைக் கொண்டிருந்தாலும் தனித்தனி அலகுகளாக இயங்கும் ஐக்கிய இராட்ச்சியம் அதிகமான மாறுதலை எட்டும் என்பதை உணரக்கூடியதாக அமைந்துள்ளது.

எனவே பிரித்தானிய ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கான நிபந்தனைகள் தொடர்ந்தும் உரையாடப்படுகின்றது. அதனை அடைவதன் மூலம் அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக பாதுகாப்பினை தனதாக்கிக் கொள்ள முடியும் எனக் கருகிறார் திரேசா மே. அவரது அரசாங்கம் பலதடவை வாக்கொடுப்பில் தோற்றாலும் அதனை எப்படியாவது அடைய வேண்டுமென விருப்புடன் செயல்படுகின்றமை கவனிக்கத்தக்கது. ஆனால் தொழில் கட்சியின் இருப்பில் ஏற்பட்டிருக்கும் இறுக்கமான நடவடிக்கை அதிகம் விட்டுக் கொடுப்பை கன்சவேட்டிக் அரசாங்கம் செய்ய வேண்டியது மட்டுமல்ல பிரித்தானியாவையே நெருக்கடிக்கு உள்ளாக்குவதாக அமையப் போகின்றது. அதனை நோக்கியே பிரித்தானியப் பாராளுமன்றம் செயல்படுகின்றது.

 

Comments