Hyundai லங்கா விற்பனைக்கு பிந்திய சேவைகளுக்கான | தினகரன் வாரமஞ்சரி

Hyundai லங்கா விற்பனைக்கு பிந்திய சேவைகளுக்கான

இலங்கையில் Hyundai வர்த்தக நாம வாகனங்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் ஏக விநியோகத்தர்களான Hyundai லங்கா பிரைவட் லிமிடெட், தமது விற்பனைக்கு பிந்திய சேவைகளுக்கான பொது முகாமையாளராக சதத் நிஸாரை 2019 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.

20 வருட காலத்துக்கு மேலாக வாகனங்கள் துறையில் அனுபவம் வாய்ந்தவராக சதத் திகழ்வதுடன், இதில் 10 வருட காலப்பகுதியில் சர்வதேச வர்த்தக நாமங்களான Volkswagen மற்றும் Audi போன்றவற்றை கட்டியெழுப்புவதில் ஈடுபட்டுள்ளார். இவர், Hyundai இன் விற்பனைக்கு பிந்திய செயற்பாடுகள் அனைத்துக்கும் பொறுப்பாக செயலாற்றுவார். மேலும், Hyundaiஇன் சிரேஷ்ட முகாமைத்துவத்துக்கு வலிமை சேர்ப்பதாக சதத்தின் நியமனம் அமைந்திருக்கும். பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு உயர் தரம் வாய்ந்த விற்பனைக்கு பிந்திய சேவைகள் மற்றும் உதவிகள் போன்றன வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.

Volkswagen மற்றும் Skoda ஆகிய வர்த்தக நாமங்களுக்காக துபாய் Ali & Sons Motors LLC நிறுவனத்தில் 6 வருடங்கள் பணியாற்றியுள்ளார். இதன் போது விற்பனைக்கு பிந்திய அணிக்கு ISO 9001 நியமங்களை எய்துவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார். மேலும், சதத் பிரத்தியேகமான மூலோபாயங்களில் பணியாற்றியுள்ளதுடன், நிதித் திட்டமிடல் மற்றும் நிறைவேற்றல் தொடர்பான செயற்பாடுகளிலும் விற்பனைக்கு பிந்திய செயற்பாடுகள் சகலதிலும் Audi, Skoda மற்றும் VW வர்த்தக நாமங்களுக்கு வாகனங்கள் துறையில் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பணியாற்றியுள்ளார்.

ஐக்கிய இராஜ்ஜியத்தின் Hertfordshire பல்கலைக்கழகத்தில் வாகனங்கள் பொறியியல் துறையில் B.Eng (Hons) பட்டத்தை சதத் பெற்றுள்ளார். இவர் சான்றளிக்கப்பட்ட பட்டய பொறியியலாளர் ஆவார். வாகனங்கள் தொழில்நுட்பத்தில் பெருமளவு அனுபவத்தை சதத் பெற்றுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு பிந்திய சேவைகள் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளை வழங்கவும் முன்வந்துள்ளார்.

Comments