நாற்பது ஆண்டுகால முன்னோக்கிய பயணத்தில் பிறீமா | தினகரன் வாரமஞ்சரி

நாற்பது ஆண்டுகால முன்னோக்கிய பயணத்தில் பிறீமா

பிறீமா நிறுவனம் கடந்த வாரம் தனது 40 அகவையில் காலடி வைத்த நாளை திருகோணமலையில் அமைந்துள்ள உலகின் மாபெரும் மா ஆலைகளில் ஒன்றும், நவீன வசதிகள் கொண்டதுமான மா ஆலைத் தொகுதியில் வெகுவிமரிசையாக அண்மையில் கொண்டாடியது.

இலங்கையின் முதலாவது வெளிநாட்டு நேரடி முதலீடாக 1977ஆம் ஆண்டு, பிறீமா பிரதான வியாபாரமான கோதுமை ஆலை மற்றும் விநியோக செயற்பாடுகள் ஆரம்பமாகின.

நான்கு சதாப்த காலமாக, இலங்கையின் உணவுப் பாதுகாப்பு, வெளிநாட்டு இருப்புகள், தொழில் வாய்ப்புக்கள், உள்நாட்டு வெதுப்பகத் துறை மற்றும் தொடர்புடைய துறைகள் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு பிறீமா முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தது.

40 வருட பூர்த்தியை குறிக்கும் வகையில் பீறீமா நாட்டின் உணவுத் துறையில் வெற்றிகரமாக இயங்கும் இலங்கையர்களை தொிவு செய்து அவர்களின் புத்தாக்கமான செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக அவர்களை கெளரவிக்கும் திட்டமொன்றை அறிமுகம் செய்யவுள்ளது.

இதனுாடாக எதிர்கால தொழில்முயற்சியாளர் மற்றும் வியாபாரங்களை ஊக்குவித்து. நாட்டின் வெதுப்பகம் மற்றும் கோதுமை மா அடிப்படையிலான தொழில்துறைகளின் தரங்களை உயர்த்தக்கூடியதாக இருக்கும் என்பது பிறீமாவின் நீண்டநாள் கனவும், எதிர்பார்ப்புமாகும்.

கடந்த 40 வருட காலத்தில் வியாபார நடவடிக்கைகளை கட்டியெழுப்பி, தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்நாட்டு பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கியது மட்டுமல்லாமல் உள்நாட்டு சமூகங்களுக்கு பல உதவிகளை வழங்கி அவர்களின் பயணத்திற்கு பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

பிறீமா நிறுவனம் இலங்கை பட்டதாரிகளுக்கு சிங்கப்பூரில் முகாமைத்துவ பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு இரண்டு மில்லியன் சிங்கப்பூர் டொலர் மதிப்பிலான புலமைப்பரிசில் திட்டத்தை வழங்க முன்வந்ததை தொடர்ந்து, சிங்கப்பூர் அரசாங்கம் ஒரு மில்லியன் ரூபாவையை வழங்கியது பெருமைக்குரிய விடயமாகும். 40 அண்டுகாலப் பூர்த்தி நிகழவில் கருத்துக் கூறிய, பீறிமா குறூப் பொதுமுகாமையாளர் டான் பெங்க் சுவான் கருத்து தெரிவிக்கையில்,

பிறீமா சிலோன் பிரைவட் லிமிடெட்டின் ஸ்தாபகர் மறைந்த செங் சாங்க் மான் எமது தற்போதைய தலைவர் பிநிமஸ் செங் உடன் இணைந்து சுமார் 42 வருடங்களுக்கு முன்னதாக திருகோணமலையின் சீனக்குடா பகுதிக்கு விஜயம் செய்து, உலகின் மாபெரும் மா ஆலையை ஒரே கூரையின்கீழ் அமைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார். இந்த நிர்மாணப் பணிகள் 1980 ஆம் பூர்த்தியடைந்தன. அக்காலப்பகுதியில இலங்கை திறந்த சந்தை பொருளாதாரத்துக்கு மாற்றமடைந்திருந்தது.

1977 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது வெளிநாட்டு நேரடி முதலீடாகவும் சிங்கப்பூரிடமிருந்து கிடைத்திருந்த முதலாவது வெளிநாட்டு முதலீட்டுத் திட்டமாகவும் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இரு நாட்டின் இனிய உறவு பாலமாக இது அமைந்திருந்தது மாத்திரமன்றி இன்று வரை தொடர்ந்து செல்வதையிட்டு பெருமிதமடைகின்றோம்.

யுத்தக்காலப்பகுதியில் எவ்வித தங்குதடையுமின்றி பிறீமா மா ஆலை செயற்பட்டது மாத்திரமன்றி மக்களின் தேவைகளையும் பூர்த்தி செயய எம்மால் முடிந்ததென்றார். உலகின் மாபெரும் ஆலையாக மாற்றம் பெற்றதுடன் நாளொன்றுக்கு 3,650MT கோதுமையை அரைக்கும் திறன்படைத்ததாக உயர்ந்தது.

இந்த ஆண்டு இலங்கை சிங்கப்பூரிடையே கூட்டு உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு 40 வருடங்கள், இலங்கைக்கு முதலாவது நேரடி முதலீடு கிடைத்து 40 வருடங்கள், இலங்கையில் பிறீமா 40 வருட கால செயற்பாடுகள் பூர்த்தியடைந்து கொண்டாடுவதையிட்டு நாம் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றோம். 40 வருட இணைப்புக்கள், பங்காண்மைகள் மற்றும நல்ல தருணங்கள் போன்ற உயர் தரம் வாய்ந்த பீறீமா படைப்புகள் இலங்கை மக்களுடன் கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம் எனத் தெரிவித்தார்.

Comments