தொழில்ரீதியான சாரதிகளுக்கு அலியான்ஸ் லைப் அறிமுகப்படுத்தியுள்ள விசேட ஓய்வூதியத் திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

தொழில்ரீதியான சாரதிகளுக்கு அலியான்ஸ் லைப் அறிமுகப்படுத்தியுள்ள விசேட ஓய்வூதியத் திட்டம்

அலியான்ஸ் லைப் இன்சூரன்ஸ் லங்கா லிமிடட் நிறுவனம், சுய-தொழில் புரியும் தொழில்ரீதியான சாரதிகளை வலுவூட்டும் முகமாக விசேட ஓய்வூதியத் தீர்வொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கையில் முதன்முதலாக அறிமுகமாக்கப்பட்டுள்ள இத்திட்டமானது தேசிய வீதிப் போக்குவரத்து பாதுகாப்புச் சபையின் வழிகாட்டலுடனும், ஆதரவுடனும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ராகமவில் நடைபெற்ற இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் தேசிய வீதிப்போக்குவரத்து பாதுகாப்பு சபை அங்கத்தவர்கள் மற்றும் கம்பஹா மாவட்டத்திலுள்ள 400 இற்கும் மேற்பட்ட தொழில் ரீதியான சாரதிகள் கலந்துகொண்டனர்.

ஏனைய ஓய்வூதியத் திட்டங்களைப் போலன்றி, காப்புறுதி செய்யப்படுவர் 70 வயதை அடையும் வரை இத்திட்டத்தை நீடித்துக் கொள்ளமுடியும். மேலும், காப்புறுதி செய்யப்படுகின்றவர் மரணிக்கும் பட்சத்தில் அதை உள்ளடக்கும் வகையில் ஆயுட் காப்பீடு ஒன்றை இத்திட்டம் கொண்டுள்ளதுடன், எமது 24 மணிநேர அழைப்பு மையத்தை எந்த நேரத்திலும் தொடர்புகொண்டு தனிப்பட்ட ஓய்வூதியக் கணக்கின் நிலுவையை அறிந்துகொள்ளும் வசதியும் உண்டு. நாட்டிலுள்ள தொழில்ரீதியான சாரதிகள் அனைவரும் காப்பீட்டைக் கொண்டுள்ளதை உறுதிசெய்யும் பொருட்டு, இந்த நன்மைகள் அனைத்தும், மிகவும் கட்டுப்படியான கட்டுப்பணத் தொகையுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட நன்மைகளுக்குப் புறம்பாக, அலியான்ஸ் நிறுவனத்தால் மட்டும் வழங்கப்படுகின்ற ஒரு விசேட பெறுமதிசேர் சேவையான Allianz Virtual Doctor சேவையையும் மேற்குறிப்பிட்ட காப்புறுத் திட்டத்தைக் கொண்டுள்ளவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். அலியான்ஸ் காப்புறுதித் திட்டத்தைக் கொண்டுள்ளவர்களுக்கு விசேடமாக வழங்கப்படுகின்ற Virtual Doctor வசதியின் மூலமாக அவர்கள் எந்தவொரு இடத்திற்கும் பிரயாணம் செய்யவேண்டிய சிரமத்தை விடுத்து, உலகிலுள்ள மிகச்சிறந்த மருத்துவ நிபுணர்களைத் தொடர்பு கொள்ள முடியும்.

Comments