ஆசிய இளைஞர் வடிவமைப்பு விருதுகள் நிகழ்வில் நிப்போன் பெயின்ட்ஸ் பிரகாசிப்பு | தினகரன் வாரமஞ்சரி

ஆசிய இளைஞர் வடிவமைப்பு விருதுகள் நிகழ்வில் நிப்போன் பெயின்ட்ஸ் பிரகாசிப்பு

நிப்போன் பெயின்ட் நிறுவனம், இலங்கை கட்டிடக்கலைஞர்கள் நிறுவகத்துடன் இணைந்து தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக நிப்போன் ஆசிய இளைஞர் வடிவமைப்பு விருதுகள் 2018 நிகழ்வினை அண்மையில் நடத்தியது. முன்னோக்கிய சவால்கள் வடிவமைப்பு எல்லைகள் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இப்போட்டியானது மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு கட்டிடக்கலை மாணவர்கள் மற்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு உட்புற வடிவமைப்பு மாணவர்களுக்கு கல்வி, பயிற்சிகள் மற்றும் இறுதியாக உலகளாவிய பிரிவில் வாய்ப்பு மற்றும் அடையாளப்படுத்தல் என வர்ணமயமான பயணமாக அமைந்திருந்தது.

அண்மையில் வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற AYDA ஸ்ரீலங்காவின் மிகப்பெரிய விருதுகள் வழங்கும் நிகழ்வில் கட்டிடக்கலை மற்றும் உட்புற வடிவமைப்பு பிரிவின் வெற்றியாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர். தங்க விருதினை வென்ற ஒவ்வொருவருக்கும் தலா ரூ.100,000 பணப்பரிசில் வழங்கப்பட்டதுடன், நிப்போன் பெயின்ட் நிறுவனத்தின் ஒட்டுமொத்த பயணத்திற்குமான அனுசரணையுடன் சிங்கப்பூரில் இடம்பெறவுள்ள பயிற்சியில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது. கட்டிடக்கலை பிரிவில் தங்க விருதினை மொறட்டுவ பல்கலைக்கழக அஷுபோத குருசிங்கவும், உட்புற வடிவமைப்பு பிரிவில் தங்க விருதினை கட்டிடக்கலை சிட்டி கல்வியகத்தைச் சேர்ந்த ஷம்மதுல் ஷாஹியா நியாஸும் வென்றெடுத்தனர்.

பிரதம விருந்தினராக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், அவைத் தலைவருமான திருமதி இந்திரா மல்வத்த, புகழ்பெற்ற கட்டிடக்கலைஞர்கள் மற்றும் உட்புற வடிவமைப்பாளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் SLIA இன் தலைவரான கட்டிடக்கலைஞர் டி.எச். விஜேவர்தன மற்றும் நிப்போன் பெயின்ட் ஸ்ரீலங்காவின் பொது முகாமையாளர் நெமந்த அபேசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிங்கப்பூரில் இடம்பெறவுள்ள AYDA இன் இறுதி போட்டியின் 4 நாள் பயிற்சி பட்டறையின் பின்னர் ஆசியாவின் மிகச்சிறந்த இளம் வடிவமைப்பாளர்கள் 30 பேர் தங்களது படைப்பாற்றல் நிறைந்த கருப்பொருட்களை வெளிப்படுத்தவுள்ளனர்.

Comments