பொலிஸாருக்கு அநீதி இழைப்பு | தினகரன் வாரமஞ்சரி

பொலிஸாருக்கு அநீதி இழைப்பு

  • குறை நிறைகளை எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை
  • மனமுடைந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள்

பொலிஸாரின் குறை நிறைகளைக் கண்டறிந்து நிவர்த்திப்பதற்குக் கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த எந்த ஓர் அரசாங்கமும் நடவடிக்ைக எடுக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலிஸாருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் காரணமாக பலர் பொலிஸ் சேவையைக் கைவிட்டுச் சென்றிருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அவ்வாறு விலகிச் சென்றவர்களுக்கு எது வித ஒழுக்காற்று நடவடிக்ைக யும் இல்லையாயின் சகலரையும் மீள இணைத்துக்ெகாள்ள நடவடிக்ைக எடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்குக் கீழ்நிலைப் பதவியில் உள்ள அனைத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்களும் மிகவும் மனமுடைந்த நிலையிலேயே சேவையில் தொடர்வதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த ஆண்டில் மாத்திரம் நோய்வாய்ப்பட்ட சுமார் 200 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மரணமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஊடகக் கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

 

கடந்த முப்பதாண்டு காலமாகப் பொலிஸ் துறைக்குப் பொறுப்பாகவிருந்த அமைச்சர்கள் எவரும் பொலிஸாரின் நிலைபற்றியோ அவர்களின் சேவைபற்றியோ கண்டுகொள்ளவில்லை. சில நீதிபதிகள், பொலிஸாரின் செயற்பாடுகளுக்குத் தடைவிதித்து வந்ததைக்கூட அமைச்சர்கள் கண்டுகொள்ளவில்லை. உதாரணமாக, சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைதுசெய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை என்றும் சில நீதிவான்கள் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். அதற்கு எந்தவிதமான நடவடிக்ைகயும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி, தற்போது அந்தத் தடையை நீக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

தாம் பொலிஸ் துறையைப் பொறுப்பேற்றபோது கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் தலையிட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பொலிஸ் துறையை ஏன் பொறுப்பெடுத்தீர்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்பியதாகவும் அதற்குத் தாம் அவர்களுக்குத் தக்க பதில் வழங்கியதாகவும் சுட்டிக்காட்டினார். அரசியலமைப்பின் பிரகாரம் இரண்டு அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி வைத்திருக்க முடியும். அத்துடன் ஐநூறு நிறுவனங்களை வேண்டுமானாலும் ஒன்றிணைத்துக்ெகாள்ள முடியும். அரசியலமைப்பிற்கமைவாகவே தாம் பொலிஸ் துறையைப் பொறுப்பெடுத்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.

பொலிஸ் துறையைப் பொறுப்பெடுத்த கடந்த மூன்று மாத காலப்பகுதியில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, சாதாரண பதவி உயர்வுக்குக்கூடப் பொலிஸார் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலைமையே காணப்பட்டது என்றார். தினமும் நின்றுகொண்டே பன்னிரண்டு மணித்தியாலம் பணியாற்றும் அநேகமான உத்தியோகத்தர்கள் நோய்வாய்ப்படுவதாகவும் கடந்த ஆண்டில் அவ்வாறு 200 பேர் வரை மரணித்திருப்பதாகவும் தெரிவித்தார். பொலிஸார் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர்களை அந்த நிலையிலிருந்து மீட்பதற்குத் தேவையான நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது பொலிஸ் துறையில் பணியாற்றும் 85 ஆயிரம் உத்தியோகத்தர்களின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி, புதிதாக நியமனம் பெற்ற பொலிஸ் ஆணைக்குழுவின் பணிகளும் திருப்திகரமாக இல்லை என்றார். அதற்கு இன்னும் சில தினங்களில் தீர்வு காணப்படும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, பதவி உயர்வு பிரச்சினை பற்றியும் கவனம் செலுத்தப்படும் என்றார். தற்போது 2500 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்ைக எடுக்கப்பட்டிருப்பதாகவும் தமிழ் மொழிமூலம் பணியாற்றுவதற்குத் தமிழ் உத்தியோகத்தர்களை நியமிக்கவிருப்பதாவும் குறிப்பிட்டார்.

போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்ைகயில் ஈடுபடும் பொலிஸாருக்கு அரசியல்வாதிகள் தலையீடு செய்யும் ஒரு போக்கு கடந்த காலங்களில் நிலவியது. ஆனால், தற்போது எந்த இடையூறும் இன்றிப் பொலிஸார் தம் கடமைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்று தெரிவித்த ஜனாதிபதியிடம், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சதி நடவடிக்ைகயில் ஈடுபட்டதாகச் சில பொலிஸ் உத்தியோகத்தர் மீது குற்றஞ்சாட்டப்பட்டமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளிக்கும்போது, "கொலைச் சதி பற்றிய விசாரணைகள் முடிவுற்றுள்ளன. அடுத்த கட்ட நடவடிக்ைகயை சட்ட மாஅதிபர் மேற்கொள்வார்" என்றார்.

கொலைச் சதி பற்றிய விசாரணையில் உங்களுக்குத் திருப்திகொள்ள முடிகிறதா?

நிச்சயமாக. எனக்குத் திருப்தி. சட்ட மாஅதிபர் மேலதிக நவடிக்ைக எடுப்பார்.

உங்கள் பாதுகாப்பு தொடர்பில் தற்போதைய நிலைவரம் எவ்வாறுள்ளது?

ஒரு பிரச்சினையும் இல்லை. என்னுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் திறமையாகப் பணியாற்றி வருகிறார்கள். அந்த நம்பிக்ைக எனக்கிருக்கிறது.

பொலிஸ் திணைக்களம் உங்களிடம் இருப்பதால், அர்ஜுன் மகேந்திரனைக் கைதுசெய்து கொண்டு வருவதற்கு என்ன தடை?

அவர் உள்நாட்டில் இருந்தால் கைது செய்வதற்கு எந்தத் தடையும் கிடையாது. எனது அதிகாரிகள் கைதுசெய்து கொண்டுவந்து விடுவார்கள். ஆனால், அவர் வெளிநாடொன்றில் அல்லவா இருக்கிறார். நான் சிங்கப்பூர் சென்றிருந்தபோது அந்நாட்டு ஜனாதிபதியிடம் மகேந்திரன் பற்றிச் சொன்னேன். அப்போது, "அவர் சிங்கப்பூர் பிரஜையோ அல்லது சிங்கப்பூரில் இருக்கிறாரோ, தவறு செய்த ஒருவர் எனின் நடவடிக்ைக எடுக்க வேண்டும்" என்றார்.

அதனைவிடவும், இன்ரபோல் பொலிஸார் சிவப்பு எச்சரிக்ைக விடுத்தால், தனை மறுதலித்து மேன்முறையீடு செய்ய முடியும். அப்படிச் செய்தால், நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவார்கள். அர்ஜுன் மகேந்திரனும் அவ்வாறு அப்பீல் செய்துள்ளார். அவரது மனுவும் விசாரணை செய்யப்பட்டு இறுதியில் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவருக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்ைக விடுக்கப்பட்டுள்ளது" என்றார் ஜனாதிபதி.

 

Comments