கச்சதீவு விழாவில் பங்கேற்க 2500பேர் முன்பதிவு | தினகரன் வாரமஞ்சரி

கச்சதீவு விழாவில் பங்கேற்க 2500பேர் முன்பதிவு

கச்சதீவு செல்ல 2,500 பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் இதில் நாட்டுப்படகில் 225 பேர் செல்கின்றனர் எனவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

கச்சதீவு புனித அந்தோனியார் கோயில் திருவிழா வரும் 15, 16ஆம் திகதிகளில் நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் இவ்விழாவிற்கு ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் உட்பட பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் சென்று வருகின்றனர். ராமேஸ்வரம் கடற்கரையிலிருந்து மட்டுமே செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக நாட்டுப்படகுகளில் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாட்டுப்படகுகளையும் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து இந்தாண்டு வல்லம் படகிலும் பக்தர்கள் செல்ல உள்ளனர்.

இதேவேளை, கச்சதீவு திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக யாழ் மாவட்ட ஆட்சியர் நா.வேதநாயகம் தெரிவித்துள்ளார். பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கான பணிகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

Comments