ஐ.நா. ஆணையர் விமர்சித்தாலும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை | தினகரன் வாரமஞ்சரி

ஐ.நா. ஆணையர் விமர்சித்தாலும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை

  • எமது பிரச்சினையை நாமே கையாள வேண்டும்; அரசாங்கம் உறுதி
  • அனுசரணை வழங்குவதிலிருந்து இலங்கை பின்வாங்கக்கூடாது

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட் இலங்கையை கடுமையாக விமர்சித்து அறிக்ைக வெளியிட்டுள்ளபோதிலும், உள்நாட்டு விவகாரத்தை சுயமாகவே தீர்த்துக்ெகாள்வது என்ற இலங்கையின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று அரசாங்க உயர் மட்ட வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜெனீவா செல்லும் குழுவினர், இலங்கையின் இந்த உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தவுள்ளதாக ஜெனீவா செல்லும் குழுவில் இடம்பெறும் முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவிலிருந்து தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

எனினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி பிரச்சினையைத் தீர்த்துக்ெகாள்ளும் நிலைப்பாட்டில் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம், நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் விவகாரமாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ள கருத்துகள் வழமையானவை என்றும் அதுபற்றித் தமது நிலைப்பாட்டை எதிர்வரும் 22ஆம் 23ஆம் திகதிகளில் நடைபெறும் அமர்வுகளில் விளக்கவுள்ளதாக ஜனாதிபதியின் தூதுக்குழுவில் இடம்பெறும் முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவிலிருந்து தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

தாம் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாகச் சென்றாலும், உண்மையில்

இலங்கை அரசின் பிரதிநிதிகளாகவே அங்கு விடயங்களை எடுத்துரைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில், எந்தவிதமான அழுத்தங்களையும் பிரயோகிக்க வேண்டாம் என்று கோரவுள்ளதுடன், இலங்கையின் உள் விவகாரத்தை சுயமாகவே தீர்த்துக்ெகாள்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரவுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது சுவிற்சர்லாந்தில் தங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜெனீவா மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான விவாதத்தில் பங்கேற்பதற்கான முன்னாயத்தங்களை மேற்கொண்டு வருகின்றார்.

இலங்கை விவகாரம் தொடர்பாக மதிப்பீட்டு அறிக்ைகயை வெளியிட்டுள்ள ஆணையாளர் நாயகம், இலங்கையின் நீதித்துறை பாரபட்சம் நிறைந்தது என்பதற்கான சான்றுகள் இருப்பதாகவும் அதனால், கலப்பு நீதிமன்றத்தை நிறுவ வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார். பொறுப்புக்கூறல் பொறிமுறையில் தாமதம் ஏற்பட்டுள்ளதென்றும் இதனால் மக்கள் விரக்திக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தொடர் கண்காணிப்பு கட்டாயம் என்று தெரிவித்துள்ள அவர், உறுப்பு நாடுகள் கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தைத் தாங்களாகவே தீர்த்துக் ெகாள்ள முடியும் என்றும் அதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இடமளிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைப்பாட்டை வலியுறுத்துவதற்காக முன்னாள் அமைச்சர்கள் மஹிந்த சமரசிங்க, கலாநிதி சரத் அமுனுகம, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் ஜெனீவா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments