ஐ.நா.ம.உ ஆணையரின் அறிக்ைகக்கு கூட்டமைப்பு வரவேற்பு | தினகரன் வாரமஞ்சரி

ஐ.நா.ம.உ ஆணையரின் அறிக்ைகக்கு கூட்டமைப்பு வரவேற்பு

  • புதிய பொறிமுறையை அரசு நடைமுறைப்படுத்த கால வரையறை வழங்க வேண்டும்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிட்டுள்ள அறிக்கையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளதுடன், புதிய பொறிமுறையில் இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளுக்கு காலவரையறை வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது.

யாழில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூட்டமைப்பின் பேச்சாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு எதிராக கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், கலப்பு நீதிமன்றப் பொறிமுறை மற்றும் ஐ.நா அலுவலகம் இலங்கையில் நிறுவப்பட வேண்டுமெனப் பல்வேறு தீர்மானங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் தீர்மானங்களை வரவேற்றுள்ளதுடன், இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுப்பதாயின், அந்த கால அவகாசத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டிய தீர்மானங்களிற்கு கால அட்டவணை வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், புதிய பொறிமுறையின் ஊடாக வழங்கப்படும் தீர்மானங்களுக்குரிய காலவரையறைகளை கனடா மற்றும் அமெரிக்க, சீனா, பிரிட்டிஷ் உட்பட நோர்வே உள்ளிட்ட 5 நாடுகளும் ஆராய வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேவேளை, 2 வருட காலத்திற்குள் இலங்கை நடைமுறைப்படுத்த

வேண்டிய நடவடிக்கையை உரிய காலத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்தக் காலப்பகுதிக்குள் நிறைவேற்ற வேண்டுமென்ற கால வரையறைகளை வழங்க வேண்டும். அதேநேரம், தற்போது நடைபெற்றுவரும் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக புதியதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும், அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியிலும் நாங்கள் ஈடுபடுகின்றோம். புதிதாக நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தை நிறைவேற்றவிடாது தடுப்பதற்கு ஜனாதிபதி ஒரு குழுவினை ஐ.நாவிற்கு அனுப்பவுள்ளதாக கேள்விப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சுமந்திரன், தமிழ் மக்கள் பிரதிநிதிகளும், புதிதாக நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தை முறியடிப்பதற்கு முனைவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Comments