ஷரத்தா தாசை ஓரங்கட்டிய சிம்பு பட நாயகி | தினகரன் வாரமஞ்சரி

ஷரத்தா தாசை ஓரங்கட்டிய சிம்பு பட நாயகி

சன்னி லியோன், ஷரத்தா தாசை ஓரங்கட்டி சிம்பு பட நாயகியான சனாகான், விஷால் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

வடஇந்தியாவைச் சேர்ந்த சனாகான் தமிழில் சிம்பு நடித்த சிலம்பாட்டம் திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்த அவர் சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவை விட்டு விலகியே இருந்தார்.

இந்த நிலையில், அயோக்யா படம் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகுக்கு மீள வந்துள்ளார். அயோக்யா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகளில் நடிகர் விஷால் பிசியாக இருந்து வருகிறார். இந்தப் படம் ஏப்ரல் 19ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘டெம்பர்’ படத்தின் ரீமேக்கே இந்தப் படம் ஆகும். இந்தப் படம் குறித்து மேலும் ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.

பெரம்பூர் பின்னி மில்லில் தற்போது அயோக்யா படக்குழு ஒரு பாடலை படம்பிடித்து வருகிறது. இந்த பாடலில் சனா கான் நடனமாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு சன்னி லியோன் நடனமாடுவதாக முன்பு தகவல் வெளியாகியது. அவர் பிசியாக இருந்ததால் ஷ்ரத்தா தாஸ் இந்தப் பாடலுக்கு நடனமாடுவதாக சில தகவல்கள் வெளியாகின.

இப்போது சனா கான் நடனமாடுகிறார். ஏ.ஆர்.முருகதாஸிடம் துணை இயக்குநராக பணிபுரிந்த வெங்கட் குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

Comments