ஊழலற்ற நாடே இல்லையா? | தினகரன் வாரமஞ்சரி

ஊழலற்ற நாடே இல்லையா?

2018 ஆம் ஆண்டுக்கான ஊழல் தொடர்பில் வெளியான தரப்படுத்தல் பட்டியலில் எந்தவொரு நாடும் 90 க்கு மேல் புள்ளிகளைப் பெறவில்லை. ஆகக்கூடியதாக டென்மார்க் 88 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைத் தட்டிச் சென்றிருக்கிறது. ஆக, உலகளாவிய ரீதியில் ஊழல் இல்லாத நாடுகளே இல்லையெனலாம். கடந்த அரை தசாப்த காலமாக ஏறத்தாழ 113 நாடுகளில் ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து செல்கின்றமையும் ஊழலுக்கெதிரான ஏற்பாடுகள் இறுக்கமாகக் காணப்படுகின்றமையும் இத்தரப்படுத்தலில் அவையால் முன்னேற முடியாத நிலைமை காணப்படுவதாக டிரான்ஸ்பேரன்சி இன்டர்நஷனல் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த வாரம் காணி நிர்வாகத்துறையில் எத்தகைய ஊழல்கள் நிகழலாம் என்பது பற்றியும் அவற்றின் காரணமாக நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைதலானது எங்ஙனம் பாதிக்கப்படலாம் என்பது பற்றியும் பார்த்திருந்தோம்.

காணி நிர்வாகத்துறையின் அங்கங்கள் பல ஊழல் எட்டிப்பார்ப்பதற்கு ஏதுவான நுழைவாயில்களைக் கொண்டிருக்கின்றன என்பதை எவருமே மறுக்க இயலாது. நலிவடைந்த காணி நிர்வாகச் சட்டங்கள், நலிவடைந்த அமைப்புகள், அமைப்புகளின் வல்லமை தொடர்பிலான சவால்கள், வெளிப்படைத்தன்மையின்மை, விளைதிறன் மிகு மேற்பார்வையின்மை, பொது மக்களின் வரையறுக்கப்பட்ட பங்களிப்பு போன்றனவே அவ்வங்கங்களாவன.

பல நாடுகளில் காணி நிர்வாகத்துக்கு அடிப்படையான சட்டங்கள் தெளிவற்றவையாகவும் சிக்கலானதாகவுமே காணப்படுகின்றன. காணியொன்றின் பராமரிப்பு, உடைமை, உரித்து, உரிமை மாற்றம், பகிர்ந்தளித்தல் , பாராதீனப்படுத்தல் போன்றன நாட்டுக்கு நாடு வேறுபடுவன. ஆயினும் பொதுவாக காணி நிர்வாகம் என்பது தெளிவற்றதாகவும் விடய ரீதியான சவால்கள் நிறைந்ததாகவும் மிக நீண்ட சிக்கலான செயன்முறைகளை உள்ளடக்கியதாகவுமே காணப்படுகிறது. ஆதலினால் தமது சொந்த நலனுக்காக ச் செயற்படும் , ஊழல் புரியும் அலுவலர்களால் சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கவே செய்கிறது.

ஒரு நாட்டுக்குள்ளும் பிராந்திய ரீதியாக, இனத்துவ ரீதியாக நகர, கிராமிய முறைமைகள் ரீதியாக காணி உரித்தானது வேறுபடுவதாக உலக வங்கியால் 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. உதாரணமாக பங்காளதேஷிலே காணி நிர்வாகத்துக்குரியனவாக நான் கு சட்டங்கள் காணப்படுகின்றன. அவையாவன 1908 ஆம் ஆண்டின் குடியியல் நடைமுறைக் கோவை, 1950 ஆண்டின் அரச சுவீகரிப்பு மற்றும் உரித்துச் சட்டம், 1908 ஆம் ஆண்டின் பதிவுச் சட்டம், 1997 ஆம் ஆண்டின் விவசாய காணி முகாமைத்துவ, பகிர்தல் கொள்கை என்பனவாகும்.

இச்சட்டங்களுள் பெரும்பாலானவை பழைமையானவையாக இருப்பதாலும் கால மாற்றத்துடன் ஈடு கொடுத்து மாறாதவையாக இருப்பதால் காணி நிர்வாகத்தில் வினைத்திறனற்ற முறைமைகள் உருவாக வழிவகுத்திருப்பதாக பங்களாதேஷின் டிரான் ஸ்பேரன்சி இன்டர் நஷனல் நிறுவனம் 2015 ஆம் ஆண்டுக்கான தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் காணி நிர்வாகத்தைப் பொறுத்தவரையிலே பல தசாப்தங்கள் பழைமையான சட்டங்களே காணப்படுகின்றன. இத்தகைய சட்டங்களில் பெரும்பாலானவை தூர நோக்கு குறைவானவையாகவே காணப்படுகின்றன. சுவீகரிப்பு போன்ற சில விடயங்களில் ஏகாதிபத்தியத் தன்மையை அரச நிறுவனங்களுக்கு வழங்கிவிடவும் தற்றுணிபால் முடிவெடுக்கும் அதிகாரத்தை அரச அலுவலர்களுக்கு வழங்கிவிடவும் அவை தவறுவதில்லை. இத்தகைய காரணங்களால் ஊழல் நிகழ்வதும் தவிர்க்க முடியாததாகி விடும். ஒரு நாட்டிலே எந்தவித போட்டி மிகு பெறுகை முறைமைகளின்றி காணியொன்றைத் தனி நிறுவனமொன்றுக்கோ அல்லது தனி நபரொருவருக்கோ வழங்குவதற்கு அதன் சட்டங்கள் இடங்கொடுக்குமாயின் அங்கு ஊழல் நிகழ்வதற்கு ஏதுவான பல சந்தர்ப்பங்கள் உருவாகலாம் என உலக வங்கியால் 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை குறிப்பிடுகிறது. இது பக்கச்சார்பான தீர்மானங்களை மேற்கொள்ளவும் இலஞ்சத்தை கோரிப்பெறவும் ஏதுவாக அமைந்து விடுகிறது.

நிர்வாக அமைப்புகளில் காணப்படும் மட்டுப்பாடுகளும் ஊழலைத் தூண்டுவனவாகவே அமைந்துவிடுகின்றன. அமைப்பொன்றின் வகிபாகம், பொறுப்புகள், கடமைகள் போன்றன தெளிவாக வரையறுக்கப்படாத போது அலுவலர்கள் பொருத்தமான நடைமுறைகளுக்கமைய தீர்மானங்களை தற்றுணிபில் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். இது நல்லாட்சியின் மதிப்பைக் குறைக்கும். ஊழலுக்கான அத்திவாரத்தையிடக் கூடிய முறையற்ற பிணைப்புகளும் உறவுகளும் தோற்றம் பெறுவதற்கு வழி வகுக்கும். இந் நிலைமையானது காணி நிர்வாகத்துக்குப் பொறுப்பான திணைக்களங்களுக்குச் சமாந்தரமாக வேறு கட்டமைப்புகள் உருவாக வழி வகுப்பதோடு அத்திணைக்களங்களால் வழங்கப்படும் ஆவணங்களின் நம்பகத்தன்மையையும் நேர்மைத்திறத்தையும் கேள்விக்குள்ளாக்கும். இத்தகைய சமாந்தரக் கட்டமைப்புகள் திணைக்களங்களுக்கு வெளியே தான் உருவாக வேண்டும் என்ற அவசியமில்லை. உள்ளேயும் உருவாகலாம்.

காணி நிர்வாகத்துறையின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படாது மத்தியிலேயே செறிந்து காணப்படும் போதும் ஊழலுக்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உருவாவதாக ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. அச் சந்தர்ப்பத்தில் மத்திய காணி நிர்வாகத்துறை நாடொன்றின் காணி உரிமையில் தன் ஆதிக்கத்தைச் செலுத்தும். இந்த அதிகாரம் சில வேளைகளில் பணம் சம்பாதிப்பதற்கான வழிகளையும் உருவாக்கிக் கொடுக்கும். காணி உரிமைகள், சட்ட விதிகள் மீது தீர்மானங்களை மேற்கொள்ளும் ஒற்றை அமைப்பு காணப்படும்போது மேற்பார்வைக்கான சந்தர்ப்பங்கள் குறைவடைவதுடன் முடிவெடுக்கும் அதிகாரம் ஒரு சிலரிடம் மட்டுமே காணப்படுவதால் ஊழலுக்கான வாய்ப்புகள் இலகுவாக உருவாகும்.

காணி நிர்வாகத்துறையில் காணப்படும் சிக்கலான நடைமுறைகளும் செயலாற்றுகைத் தாமதங்களும் சேவை இலஞ்சம் வழங்கி செயன்முறையைத் துரிதப்படுத்துவதற்கு சேவை நாடிகளைத் தூண்டும். இந் நிலைமையானது பல அலுவலர்கள் தமது பதவியைப் பயன்படுத்தி இலஞ்சம் வழங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்கவும் காரணமாக அமையும் என டெனிங்கர் என்பவர் தனது ஆய்விலே குறிப்பிட்டிருக்கிறார்.

அலுவலர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை வினைத்திறனாகவோ அல்லது விளைதிறனுடனோ ஆற்ற இயலாத நிலையில் உள்ள போது அல்லது அலுவலர்களுக்கு போதிய பயிற்சிகள் இல்லாதபோது அங்கு ஊழல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இது காணி நிர்வாகத்துடன் தொடர்பான சேவைகளைப் பொறுத்தவரையிலே மிகவும் உண்மையானதாகும் என பங்காளதேஷின் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர் நஷனல் நிறுவனம் தெரிவிக்கிறது.

ஏனெனில் காணி நிர்வாகம் சிறப்பாக நடைபெற துறை சார் பயிற்சிகளும் வல்லமை மிக்க அலுவலர்களும் அத்தியாவசியமாவன. அது மட்டுமன்றி பல நாடுகளில் காணி நிர்வாகத்திணைக்களங்களில் அலுவலர்களில் வல்லமைக்கு மேலாக கடமைகள் திணிக்கப்படும் சந்தர்ப்பங்களும் காணப்படவே செய்கின்றன. காணி நிர்வாகத் திணைக்களங்களில் அலுவலர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப் படாமல் காணப்படும் போதும் (தொடர் 30ஆம் பக்கம்)

Comments