இலக்கியப் பொன் விழாக் காணும் கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் | தினகரன் வாரமஞ்சரி

இலக்கியப் பொன் விழாக் காணும் கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன்

இலக்கிய உலகில் பேசப்படும் கலாபூஷணம் ஆசுகவி அன்புடீனின் இலக்கியப் பொன்விழாவும், சிற்பம் செதுக்கிய சிற்பி மலர் வெளியீடும் இன்று ஞாயிற்றுக்கிழமைகாலை 9.00 மணிக்கு அட்டாளைச்சேனையில் நடைபெறவுள்ளது இதனையொட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.

இலக்கிய உலகில் பரந்து பேசப்படுபவர் கவிஞரும், எழுத்தாளருமான அன்புடீன் மேடை நாடகத்தின் ஊடாக இலக்கியப் பரப்புக்குள் நுழைந்தவர். அதனைத் தொடர்ந்து கவிதையிலும், சிறுகதையிலும் பிரபலமானார். இன்று வரை பல புத்தகங்களை வெளியிட்டு இலக்கிய பரப்பில் மிகவும் ஆழமாகத் தடம் பதித்துள்ளார். எல்லோருடனும் இவர் மிகவும் அன்பாகவும், பண்பாகவும், பேசுவதனாலும், பழகுவதானாலோமோ என்னவோ அன்புடீன் என்ற புனைப்பெயர் இவரில் ஆழமாக வேரூன்றி இருக்கின்றது. இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு இவர் நல்ல வழிகாட்டி இவரது வழிகாட்டலில் பலர் இலக்கியத்தில் வளர்ந்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கலந்தர் லெப்பை என்ற இயற்கைப்பெயரைக் கொண்ட இவர் 1951.08.25ஆம் திகதி பாலமுனையில் பக்கீர் முஹிதீன், ஆசியா உம்மா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பாலமுனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை, நிந்தவூர் அல்-அஷ்ரக் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றவர். 1975.06.15ஆம் திகதி தொடக்கம் 2011.08.25ஆம் திகதி வரை அஞ்சல் விநியோக உத்தியோகத்தராகத் தொழில் புரிந்துள்ளார்.

1968ஆம் ஆண்டு மேடை நாடகத்தின் ஊடாக இவரது கலை இலக்கிய பிரவேசம் ஆரம்பமாகியுள்ளது. இவரது முதற் கவிதை “குயிலே நீ கூவு” என்ற தலைப்பில்1968 ஆம் ஆண்டு குயிலோசை சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளது. இதுவரை இவர் வெளியிட்டுள்ள நூல்கள்:- அன்னை மகிழ்கிறாள் (வரலாறு1982) முகங்கள் (கவிதை 1988)ஐந்து தூண்கள் (கவியரங்குக் கவிதை 1999)சாமரையில் மொழி கலந்து (கவிதை 2002)நெருப்பு வாசல் (சிறுகதை 2011) தொப்புள் கொடியும் தலைப்பாகையும் (கவிதைத் 2016) மத்திய அரசின் சாஹித்திய மண்டல பரிசும், கொடக்கே சாகித்ய மண்டல விருதும் பெற்றது)

விருதுகள், பட்டங்கள், கெளரவங்கள்

கல்முனை புதுமை கலை இலக்கிய வட்டம் (புகவம்) ஆசுகவி பட்டம், விருது -1999, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி “கவித் தாரகை” பட்டம், விருது -1999, கொழும்பு பரிய நிலா கலை கலாசார பேரவை “கவிமாமணி” பட்டம் - 2000, உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு, கலைஞர் கெளரவிப்பு 2002, தினச்சுடர் பத்திரிகை, வருடாந்த சிறந்த கவிஞர் விருது (Best Poet) 2004. அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார விழா, கவிஞர் கெளர விப்பு - 2007. அம்பாறை மாவட்ட செயலக சாஹித்திய விழா, கலைஞர் கெளரவிப்பு, திகாமடுல்ல அபிமானி விருது - 2008. கலாசார அலுவல்கள் திணைக்களம், கலாபூஷணம் விருது - 2009. நிந்தவூர் கமு மீடியா கலைஞர் கெளரவிப்பு. கவிச்செம்மல் பட்டம், -விருது - 2009. மல்லிகை சஞ்சிகை முகப்புப் படம் பிரசுரிப்பு 2012.கிழக்கு மாகாண கல்வி கலாசார அமைச்சு முதலமைச்சர், இலக்கிய வித்தகர் விருது - 2012.அகில இலங்கை YMMA தேசிய கெளன்சில் சமூக சேவையாளர் கெளரவிப்பு ஹபீபுல் இன்ஸானி பட்டம் - 2013.காத்தான்குடி நவ இலக்கிய மன்றம் 55ஆவது ஆண்டு விழா. கலைஞர் கெளரவிப்பு இலக்கிய வாரிதி பட்டம், சான்றிதழ் - 2014.அக்கரைப்பற்று Global Activity Foundation நடத்திய சிறந்த படைப்பாளி விருது - 2014. அட்டாளைச்சேனை பிரசே செயலகம் முதியோர்தின விழா “முதல் மரியாதை” விருது - 2014. பாலமுனை இப்னு ஸீனா வித்தியாலய கல்வி சார் ஊழியர் கழகம் இலக்கிய பணியை பாராட்டி நினைவுப் பேழை – 2015, தடாகம் கலை இலக்கிய வட்டம், பாவரசு பட்டம் - 2016.நிந்தவூர் ஆர்கே மீடியா சிறந்த கலைஞர் கெளரவம் - 2016. கவிஞர் சோலைக்கிளி தனது ‘மண்கோழி’ கவிதைநூல் சமர்ப்பணம், அட்டாளைச்சேனை பிரதேச கலைஞர் கெளரவிப்பு – 2017, தொப்புள் கொடியும் தலப்பாகையும் நூலுக்கு சாகித்திய மண்டல விருது 2017. தொப்புள் கொடியும் தலப்பாகையும் நூலுக்கு ‘கொடகே விருது’ - 2017. சாஹித்திய விருது, கொடகே விருது பெற்றமைக்காக அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார பிரிவு பாராட்டு, பரிசு - 2017. அக்கரைப்பற்று தேசிய பாடசாலை “வாழும் போதே வாழ்த்துவோம்” சாதனையாளர் பாராட்டு நிகழ்வில் மகா உன்னதம் விருது - 2017. அட்டாளைச்சேனை நுஜா ஊடக அமைப்பு மே தின விழாவின் ‘மக்கள் கவிஞன்’ பட்டம் விருது. ஒளி அரசி சஞ்சிகை முகப்புப்படம் பிரசுரிப்பு, கெளரவம் - 2017.படிகள் இலக்கிய சஞ்சிகை முகப்புப்படம் பிரசுரிப்பு கெளரவம் - 2018 போன்றவற்றை அவருக்கான சில கௌரவங்களாகச் சொல்லலாம்.

Comments