விவசாயி | தினகரன் வாரமஞ்சரி

விவசாயி

படர்க்கை பார்வைகள் உனக்கு 

தாழ்மைத்தடைகள் போடலாம் 

ஆனால் நீ உழவில் ஏறுபோல் 

நடைபோடு 

பகலவன் ஒளி முதல்வன்போல் 

நீயே தொழில் முதல்வன் என்பதால் 

நரைதிரை மூப்பிலும் 

உன்கரங்கள் தளர்ந்திடாது 

முனைய வேண்டும் 

பசிப்பிணி போக்கும் அட்சயம் 

அவ்வுழைக்கும் கரங்கள் என்பதால் 

உண்டி கொடுத்து 

உயிர்காக்கிறாய் அதற்கெனவே 

உன் வாழ்வை முழுதும் கிழிக்கிறாய் 

நாகரிக உலகம் இன்று உன்னை 

கழித்துப்போட்டாலும் 

சளித்துக் கொள்ளாமல் உழவு செய்யும் 

தெய்வமனம் உன்போல் 

யாருக்கு வாய்க்கும் 

சேற்றிலே கால்வைத்து 

சோற்றிலே கைவைக்கத் தருகிறாய் 

உன்சேவையை நானிலம் மறந்தாலும் 

நிலையான இறைவன் 

மறக்கமாட்டான் ஒருபோதும் 

வஞ்சகமற்ற உன் விவசாயநதி 

இறையாழில் கலப்பது உறுதியே 

கலங்காதே! 

பூவெலிகட எம். எஸ். எம். சப்ரி

Comments