அரச ஊழியர், ஓய்வூதியர் கொடுப்பனவு அதிகரிப்பு | தினகரன் வாரமஞ்சரி

அரச ஊழியர், ஓய்வூதியர் கொடுப்பனவு அதிகரிப்பு

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் அரசாங்கத்தின் ஐந்தாவது வரவு செலவுத்திட்டம் கடந்த 5ஆம் திகதி நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அரச ஊழியர்கள், ஓய்வூதியக்காரர்கள் ஆகியோருக்கு கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சர் முன்மொழிந்துள்ளார். காணாமல்போனோரின் உறவினர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை அந்தக் குடும்பங்களுக்குத் தற்காலிகமாக மாதாந்தம் ஆறாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கவும் சமுர்த்தி நிவாரணம் பெறுவோரின் தொகையை மேலும் ஆறு இலட்சத்தால் அதிகரிக்கவும், புதிதாகத் திருமணம் செய்துகொள்ளும் இளந்தம்பதிகளுக்கு இலகு வட்டிக் கடனாக ஒரு கோடி ரூபாய் வீடமைப்புக் கடன் பெற்றுக்ெகாடுக்கவும், தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் பல்வேறு கடன் திட்டங்களையும் அமைச்சர் முன்மொழிந்துள்ளார். நிதியமைச்சரின் முழுமையான முன்மொழிவுகள் வருமாறு...

* கடவுச்சீட்டு ஒரேநாள் சேவை ரூ.5000ஆல் அதிகரிப்பு

* மதுபானம், சிகரட், வாகனம், நெடுஞ்சாலை கட்டணம் அதிகரிப்பு

* புதுமணத் தம்பதிகளுக்கு ஒரு கோடி வீட்டுக்கடன்

* வடக்கு கிழக்கு வீட்டுத்திட்டத்திற்கு 5,500 மில். நிதி

* முஸ்லிம் மீள் குடியேற்றத்திற்கு வசதி

* அதிவேக பாதை நுழைவுக்கட்டணம் 100 ரூபாவினால் அதிகரிப்பு

* சகல பாடசாலை மாணவர்களுக்கும் இலவச குவளைப்பால்

* மேலும் ஆறு இலட்சம் பேருக்கு சமுர்த்தி நிவாரணம்

* இலத்திரனியல் முச்சக்கர வண்டி, சிறிய ரக கார்களுக்கு சலுகைக்கடன்

* முன்பள்ளிகளை புனரமைப்பதற்கு சலுகைக்கடன் திட்டம்

* மேலும் 5,000 சிறுநீரக நோயாளர்களுக்கு உதவித்தொகை

* 10 இலட்சம் குடும்பங்களுக்கு கழிப்பறை வசதி

* பெயருடன் கூடிய வாகன இலக்கத் தகடுக்கான விலைகள்

ஜுன் 01 முதல் அதிகரிப்பு

* வெளிநாட்டில் பணிபுரிவோருக்கு 10 மில். வீட்டுக்கடன்.

* - வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு பனை நிதியம்.

-* பிரசவ விடுமுறை வழங்கும் நிறுவனங்களுக்கு சலுகை.

-* மாற்றுத் திறனாளி கொடுப்பனவு 5 ஆயிரமாக அதிகரிப்பு.

* -கடவுச் சீட்டு ஒரு நாள் மற்றும் சாதாரண விநியோகம், கடவுச் சீட்டு திருத்தம் தொடர்பான கட்டணங்கள் 2019 ஏப்ரல் 01 ஆம் திகதியிலிருந்து திருத்தம்.

* சாதாரண சேவை கட்டணம் 3,000 ரூபாவில் இருந்து 3,500 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.

* -70 KV இலத்திரனியல் வாகனங்களுக்கான இறக்குமதி வரியை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

* -750 மில்லி லீட்டர் வன் மதுபான போத்தல் ஒன்றிற்கான உற்பத்தி வரி 63 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

* அத்துடன் 330 மில்லி லீட்டர் பியர் போத்தல் ஒன்றிற்கான உற்பத்தி வரி 9 ரூபாவினால் அதிகரிப்பு.

* -பெற்றோல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பு.

* 800 ccக்கு குறைந்த பெற்றோல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி 150,000 ரூபாவினாலும், 1000 ccக்கு குறைந்த பெற்றோல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி 175,000 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட உள்ளது.

* 1300 ccக்கு குறைந்த பெற்றோல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி 500,000 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

* 200 cc முச்சக்கர வண்டிகளுக்கு 60,000 ரூபா இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.- மோட்டார் வாகனத்திற்கான பெயருடன் கூடிய விசேட இலக்கத் தகடுக்கான விலைகள் ஜூன் 1 முதல் அதிகரிப்பு.

* பெயருடன் தனிப்பட்ட விசேட இலக்கத் தகடு பெற 10 இலட்சம் ரூபா கட்டணம்.

* ஜூன் முதல் சிகரட் மீது தேச கட்டுமான வரி அறிமுகம்.

-* பீடி இலை இறக்குமதி மீதான உற்பத்தி தீர்வை கிலோவுக்கு 2,500 ரூபாவில் இருந்து 3,500 ரூபாவாக மார்ச் 6 முதல் அதிகரிப்பு.

-* பழச்சாறு, மதுபானம் மற்றும் புகையிலைக்கான சுங்க இறக்குமதி தீர்வையில் மாற்றம்.

* - ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் விஷேட கொடுப்பனவு வழங்க முடிவு.இதற்காக 40 பில்லியன் நிதி ஒதுக்கீடு.2016 முதல் 107 வீதத்தினால் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது

* 2015இல் 11,730 ரூபாவாக இருந்த சிற்றூழியர் சம்பளம் 2020 இல் 24,250 ஆக உயரும். ஆசிரியர் சம்பளம் 2020 இல் 33,300 ஆகவும் அமைச்சு செயலாளர் சம்பளம் 47,515 இல் இருந்து 98,650 ஆக உயரும். ஜூலை முதல் அமுல்.

* வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு 5 இலட்சத்தில் இருந்து 10 இலட்சமாக அதிகரிப்பு.

* - மடு தேவாலய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 200 மில்.ஒதுக்கீடு.

-* காணாமல் போனவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை மாதாந்தம் 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க முடிவு.

* - வடக்கு கிழக்கு துரித அபிவிருத்திக்காக 2 வருட காலத்தில் 5 மில்லியன் ரூபா முதலீட்டில் பனை நிதியம் உருவாக்கப்படும். புலம்பெயர்ந்தோர், நலன்விரும்பிகளுக்கு அழைப்பு.

* -இரண்டு வருட காலத்தினுள் கழிப்பறை வசதியற்ற 10 இலட்சம் மக்களுக்கு கழிப்பறை வசதி

* - 3 மாத கட்டாய பிரசவ விடுமுறை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை

* - மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் 3 ஆயிரம் ரூபா மாதாந்தக் கொடுப்பனவு 5 ஆயிரமாக அதிகரிப்பு

* - மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் வழங்கும் நிறுவனங்களுக்கு தலா ஒரு ஊழியர் சார்பில் 50 வீத சம்பள மானியம் வழங்கப்படும்.

* -21 ஆயிரம் சிறுநீரக நோயாளிகளுக்கு மேலதிகமாக மேலும் 5 ஆயிரம் சிறுநீரக நோயாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாவீதம் உதவித் தொகை வழங்க 1840 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

* வடக்கு கிழக்கு செங்கல் வீடமைப்பு பணிகளுக்கு மேலும் 5500 மில்லியன் நிதி ஒதுக்கீடு

-* முஸ்லிம்களின் மீள் குடியேற்ற பிரச்சினைகளை தீர்க்க தேவையான வளங்கள் பெற்றுக் கொடுக்கப்படும்.

* -காங்கேசன் துறை, மாந்தை கிழக்கு, பரந்தன், கொண்டச்சி, கிண்ணியா, சம்மாந்துறை மற்றும் திருமலையில் கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்படும்.

* 2019 ஆகஸ்ட் முதல் சிறந்த பெறுபேறுகளை பெறும் உயர்தர மாணிவர்களுக்கு (பௌதிக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம், தொழில் நுட்பம், வர்த்தகம், மற்றும் கலைப்பிரிவு) ஹாவட், எம்.ஐ.ரி,ஒக்ஸ்போட். கேம்பிரிஜ் பல்கலைக்கழகங்களில் கற்க புலமைப்பரிசில்.

* இந்த வருடம் 14 மாணவர்கள் அடுத்த வருடம் 28 மாணவர்கள் தெரிவு. மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கும் வாய்ப்பு.

* பல்கலைக்கழகம் தெரிவாகாத மாணவர்களுக்கு அரசதுறைசாரா பல்கலைக்கழகங்களில் பயில 11 இலட்சம் ரூபா வட்டியில்லா கடனுதவி.

-* அறு​ைவக்காடு திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்திற்கு 2019 இல் 7,600 மில்லியன் ரூபா மூதலீடு செய்யப்படும்.

* யாழ் பழைய நகர மண்டப மீள்கட்டமைப்பிற்கு 700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.

* - இரு வருடத்தில் மேலும் 2 இலட்சம் குடும்பங்களுக்கு நீர் வசதியளிக்க 1000 கிராமங்களை உள்ளடக்கி பிரஜா ஜன அபிமன் திட்டம் அறிமுகம்.

* இரண்டு வருடத்தில் இ.போ.சவிற்கு 250 பஸ்கள் தருவிப்பு.

* இலத்திரனியல் முச்சக்கர வண்டி மற்றும் சிறிய ரக கார் கொள்வனவிற்கு சலுகைக்கடன் வசதி. பழைய முச்சக்கர வண்டி பாவனையில் இருந்து அகற்றப்படும்.

Comments