AMW டயர்களை உபயோகிக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச காப்புறுதி | தினகரன் வாரமஞ்சரி

AMW டயர்களை உபயோகிக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச காப்புறுதி

Associated Motorways (AMW), தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக Ceylinco General Insurance நிறுவனத்துடன் இணைந்து மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மற்றும் ஸ்கூட்டர்களுக்கு AMW டயர்களைக் கொள்வனவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச காப்புறுதித் திட்டத்தை வழங்கவுள்ளது.

புதிய AMW டயர் உற்பத்தி வரிசையிடமிருந்து கிடைக்கப்பெறுகின்ற பாதுகாப்பினை இப்பங்குடமையானது மேலும் மேம்படுத்துவதுடன், இப்புதிய டயர்களைக் கொள்வனவு செய்கின்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரு வருடம் வரையான காலப்பகுதிக்கு 250,000 ரூபா இலவச தனிப்பட்ட விபத்துக் காப்புறுதித் திட்டத்தை வழங்கி, அவர்களின் நலனில் அக்கறை செலுத்துகின்றது.

24 மணி நேர தனிப்பட்ட விபத்துக் காப்புறுதித் திட்டமாக இது அமைந்துள்ளதுடன் இறப்பு அல்லது ஒட்டுமொத்த நிரந்தர அங்கவீனத்திற்கு எதிரான காப்பீட்டை இத்திட்டம் கொண்டுள்ளது.

AMW Mor-Max மோட்டார் சைக்கிள் டயர்கள், Epic Hi-Max முச்சக்கர வண்டி டயர்கள் மற்றும் Epic Ray-Max ஸ்கூட்டர் டயர்கள் ஆகிய மூன்று வகையான AMW டயர் வர்த்தகநாமங்களுக்கும் இத்திட்டம் கிடைக்கப்பெறுவதுடன், நாடளாவிய ரீதியிலுள்ள AMW விற்பனை மையங்கள் மற்றும் முகவர்கள் வலையமைப்பினூடாக அவை கிடைக்கப்பெறுகின்றன. எந்த வீதி நிலைமைகளின் போதும் சிறந்த அளவில் பற்றிப் பிடிக்கும் தன்மையை உறுதி செய்து, பிரேக் தடுப்பினை பிரயோகிக்கும் போது சிறந்த வகையில் செயல்படுகின்ற வகையில் பாதுகாப்பு மட்டங்களை மேம்படுத்தும் விதத்தில் மூன்று வகையான டயர் வர்த்தகநாமங்களும் நவீன போக்கிலான வடிவமைப்பைக் கொண்டுள்ளன. தலைசிறந்த கட்டுப்பாடு, உறுதிப்பாடு மற்றும் சிறந்த உறுதித்தன்மையையும் கொண்டுள்ளன.

டயர்கள் கொண்டுள்ள குறைந்தளவிலான உருளல் தடுப்பு சிறப்பம்சமானது எரிபொருள் விரயமாவதைக் குறைப்பதுடன், கிலோ மீற்றருக்கான இயக்கும் செலவைக் குறைத்துக் கொள்ள உதவுகின்றது. ISO 9001:2008 தர முகாமைத்துவ முறைமை, ISO 14001:2004 சுற்றுச்சூழல் முகாமைத்துவ முறைமை மற்றும் நடைமுறை இணக்கப்பாட்டிற்கான EU REACH சான்று அங்கீகாரம் அடங்கலாக, சர்வதேச தரச் சான்று அங்கீகாரங்களுடன் களுத்துறையில் அமைந்துள்ள AMW இன் அதிநவீன தொழிற்சாலை வளாகத்தில் டயர்கள் அனைத்தும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

Comments