சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணியகத்தின் அனுசரணையில் இரண்டாவது முறையாகவும் | தினகரன் வாரமஞ்சரி

சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணியகத்தின் அனுசரணையில் இரண்டாவது முறையாகவும்

கொழும்பு, காலிமுகத்திடலில் 2019 பெப்ரவரி 24 ஆம் திகதியன்று இடம்பெறவுள்ள So Sri Lanka IRONMAN 70.3 மூவிளையாட்டு நிகழ்வின் பிரதான அனுசரணையாளராகச் செயற்படுவதற்கு இலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணியகம் முன்வந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் Pro-Am Serendib இனால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பல்வேறு அரச மற்றும் தனியார் துறை ஸ்தாபனங்களும் இதற்கு ஆதரவை வழங்க முன்வந்துள்ளன.

சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் இலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணியகம் So Sri Lanka IRONMAN 70.3 Colombo நிகழ்வை இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ளதுடன், இந்நிகழ்வில் 56 நாடுகளிலிருந்து 700 இற்கும் மேற்பட்ட தட கள வீரர்கள் பங்குபற்றவுள்ளனர். கடந்த ஆண்டு இடம்பெற்ற முதலாவது IRONMAN 70.3 நிகழ்வில், 60 இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 850 இற்கும் மேற்பட்ட தட கள வீரர்கள் பங்குபற்றி, மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments