குடும்ப ஆரோக்கிய மேம்பாட்டில் Sri Lanka Medical Nutrition Association | தினகரன் வாரமஞ்சரி

குடும்ப ஆரோக்கிய மேம்பாட்டில் Sri Lanka Medical Nutrition Association

குடும்பங்களிடையே போஷணை மிக்க உணவுப் பழக்கத்தை ஊக்குவித்து, ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு தீர்வு காண Sri Lanka Medical Nutrition Association நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை மக்கள் மத்தியில் 22% ஆனோர் ஊட்டச்சத்து பற்றாக்குறை கொண்டவர்களாக காணப்படுவதுடன், சிறுவர்கள் மத்தியில் 15% ஆனோர் வளர்ச்சி குன்றியவர்களாகவும் காணப்படுகின்றர்.

ஊட்டச்சத்து குறைபாடு என்பது எவருமே கவனிக்காத பாரிய பிரச்சனைகளில் ஒன்றாக காணப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியம், Solidaridad Network Asia மற்றும் அதன் பங்காளர்களின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படுகின்ற Reaching the Unreached Estates and Surrounding Communities on Equitable Water, Sanitation, Hygiene (WASH) for Improved Health and Nutrition Project (மேம்பட்ட ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்திற்காக வசதிகள் கிடைக்கப்பெறாத தோட்டப்புறங்கள் மற்றும் சூழவுள்ள சமூகங்களுக்கு பயன்பெறும் வகையில் குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் துப்புரவு வசதிகளை வழங்குதல்) என்ற செயற்திட்டத்தின் கீழ் Sri Lanka Medical Nutrition Association (SLMNA) Nucleus Foundation (NF) மற்றும் Institute of Social Development (ISD) ஆகியன ஒன்றிணைந்து வசதிகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பின்றித் தவிக்கும் கிராமப்புற சமூகங்களுடன் நேரடியாக பணியாற்றி வருகின்றன.

இப்பிரச்சினை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, சிறுவர்கள் மற்றும் வளர்ந்தவர்கள் என இரு தரப்பினரதும் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்து வகைகளை வழங்கி, நாட்டில் உணவுப் பரம்பலை மகத்தான அளவில் ஏற்படுத்தி, குடும்பங்கள் அதன் மூலமாக பயன்பெறுவதை உறுதி செய்யும் வகையில் குடும்பத்தை மையமாகக் கொண்ட நடைமுறை மற்றும் பொறிமுறைகளை வழங்குவதற்காக தொடர் பயிற்சி நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய அவை திட்டமிட்டுள்ளன.

 

Comments