மேற்கிந்திய அணியில் மீண்டும் கெய்ல்! | தினகரன் வாரமஞ்சரி

மேற்கிந்திய அணியில் மீண்டும் கெய்ல்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு ஒருநாள் போட்டிகளுக்கான தொடரில் கிறிஸ் கெய்ல், மேற்கிந்திய அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் கடந்த வருடம் சொந்த நாட்டில் நடைபெற்ற பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் போட்டியில் கிறிஸ் கெய்ல் இறுதியாக விளையாடியிருந்தார்.

இந்நிலையில் ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்காக அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதில் மீண்டும் நிக்கோலஸ் பூரனும், கிறிஸ் கெய்ல்லும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மேற்கிந்திய அணிக்காக இதுவரை 284 போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெய்ல் 9727 ஓட்டங்களை சேர்த்துள்ளார். இது அவ்வணி வீரர் ஒருவர் பெற்ற இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்களாகும்.

இதில் பிரையன் லாரா 299 போட்டிகளில் விளையாடி 10405 ஓட்டங்களை பெற்று முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன் பின் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Comments