ஹேலீஸ் பெருந்தோட்ட நிறுவனத்துக்கு விருதுகள் | தினகரன் வாரமஞ்சரி

ஹேலீஸ் பெருந்தோட்ட நிறுவனத்துக்கு விருதுகள்

இலங்கை பட்டயகணக்காளர் நிறுவனம் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் CA விருதுவிழாவில் பெருந்தோட்ட பிரிவின் கீழ் தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாகவும் தங்க மற்றும் வெள்ளி விருதுகளை ஹேலீஸ் நிறுவனம் வென்றெடுத்துள்ளது.

தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் களனிவெலி பெருந்தோட்ட நிறுவனம் இம்முறையும் தங்க மற்றும் வெள்ளி விருதுகளை வென்றெடுத்து பெருந்தோட்டப் பிரிவின் கீழ் தமது திறமைகளை மீண்டும் நிரூபித்துள்ளது. அத்துடன் ஹேலீஸ் குழுமத்துக்கு சொந்தமான இணை நிறுவனங்கள் ஆறு தமது நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்திய பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றெடுத்துள்ளமை விசேட அம்சமாகும்.

ஹேலீஸ் பெருந்தோட்ட நிறுவனம் வென்றெடுத்த விருதுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த ஹேலீஸ் பெருந்தோட்டதுறையின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரொஷான் ராஜதுரை நாம் செய்யும் அனைத்து செயற்பாடுகளையும் திறமையாக மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செய்யும் நிறுவனமே ஹேலீஸ் பெருந்தோட்ட நிறுவனமாகும். பெருநிறுவன பொறுப்பு மற்றும் பொறுப்பு தொடர்பாக பலமான வரையறைக்குள் நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். அத்துடன் எமது ஆண்டு அறிக்கையானது வெளிப்படையான மற்றும் துல்லியமான வகையிலேயே வெளியிடப்பட்டுள்ளதுஎன அவர் கூறினார்.

இதுதவிர ஹேலீஸ் பெருந்தோட்ட நிறுவனம் மேலும் பலவிருதுகளை வென்றெடுத்துள்ளதுடன் சுற்றாடல் முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்புக்காக தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாகவும் ஜனாபதி சுற்றாடல் விருதை 2018 தேசிய வியாபார விருது வழங்கும் விழாவில் வென்றெடுத்தது. அதேபோல் தலவாக்கலை தேயிலை தோட்ட நிறுவனம் தேசிய வியாபார விருதுவிழாவில் விவசாயம் மற்றும் பெருந்தோட்டம் ஆகிய துறைகளில் தங்கவிருதுகளை வெற்றெடுத்ததுடன் ஜனாதிபதி சுற்றாடல் விருதுவிழாவில் மேலும் ஐந்து விருதுகளை வென்றெடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments