வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தும் American Express | தினகரன் வாரமஞ்சரி

வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தும் American Express

புதுவருடத்தில், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி American Express அட்டைதாரர்களுக்கு பிரத்தியேகமான சேமிப்புகள் மற்றும் பிரிவிலேஜ்கள் போன்றன நாட்டின் முன்னணி சுகாதார மற்றும் உடற்தகைமை பகுதிகளில் வழங்கப்படுகின்றன. புகழ் பெற்ற ஜிம்கள், ஸ்பாக்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு ஆடைகள் போன்றவற்றிலும், ஆரோக்கிய உணவகங்கள் மற்றும் ஆரோக்கியமான சேர்மானங்களை வழங்கும் முன்னணி சுப்பர் மார்கெட்கள் போன்றவற்றில் பெருமளவு சேமிப்புகளை அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த திட்டம் தொடர்பாக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் அட்டைகள் பிரிவின் தலைமை அதிகாரி நிலுக குணதிலக கருத்துத் தெரிவிக்கையில், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பில் சர்வதேச ரீதியில் அதிகளவு கவனம் செலுத்தப்படுகிறது. திடகாத்திடமான உடல் மற்றும் ஆரோக்கியமான உளநிலை போன்றன சிறந்த நிலையில் செயலாற்ற உங்களுக்கு உதவும். இந்த சலுகைகளினூடாக எமது அட்டைதாரர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுத்து, 2019 இல் தமது இலக்குகளை எய்த வலுவூட்டுகிறோம்.

எனவே புது வருடத்தில் புதிய வாழ்க்கை முறையை பின்பற்ற எதிர்பார்ப்பவராயின் அல்லது சிறந்த ஆரோக்கியத்துடன் திகழ எதிர்பார்ப்பவராயின், American Express அட்டையின் உதவியுடன் உங்கள் இலக்கை எய்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். எமது அட்டைதாரர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதற்கு நாம் தொடர்ச்சியாக புதிய வழிமுறைகளை நாடுகிறோம். சிறந்த தேக ஆரோக்கியம் என்பது பெருமளவு பயன்தரக்கூடியதாக இருக்கும். எனவே, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி American Express சார்பாக அட்டைதாரர்கள் அனைவரையும் இந்த சலுகைகளை பயன்படுத்தி தமது உடல் நலன் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அழைப்புவிடுக்கிறேன் என்றார்.

முதல் தர ஜிம்களில் அட்டைதாரர்களுக்கு உயர் சேமிப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக 0% தவணை முறை கொடுப்பனவு திட்டங்களும் வழங்கப்படும். Zimantra, Body Doc Fitness (25%), Zero Xcuses (20%), Fitness Connection (20%), High Octane Fitness (20%) மற்றும் Total Fitness Bay (10%) போன்றவற்றில் வழங்கப்படுகின்றன.

Comments