கஹவத்த குருகே மெனிக் நிறுவனத்துக்கு ஜனாதிபதி விருது | தினகரன் வாரமஞ்சரி

கஹவத்த குருகே மெனிக் நிறுவனத்துக்கு ஜனாதிபதி விருது

மாணிக்கக்கல் தொழிலில் முன்னணி நிறுவனமான கஹவத்த குருகேமெனிக் இரட்டை ஜனாதிபதி விருதுகளை வென்றுள்ளது. மாணிக்கக் கற்கள் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதி விருதுவழங்கும் விழாவில் மாணிக்கக் கல் சுரங்க அகழ்வில் அதிக உரிமப்பத்திரதாரிக்கான வெங்கல பதக்க விருதினையும் சுரங்க அகழ்வு நிபுணருக்கான சிறப்புத் தேர்ச்சி விருதினையும் இந்நிறுவனம் வென்றுள்ளது. குருகே மெனிக் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கயான் குருகே இந்த விருதுகளைப் பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு Shangri la ஹோட்டலில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

குருகே மெனிக் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜினதாச குருகேவினால் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட குருகேமெனிக் நிறுவனம் பலதசாப்த காலங்களாக வெற்றிநடை போடுகிறது. இல 169/C, வித்தியாலய மாவத்தை, கஹவத்த எனும் முகவரியில் இதன் தலைமை அலுவலகமும் காட்சியறையும் அமைந்துள்ளது. சுதேசமட்டத்தில் மாணிக்கக் கல் வர்த்தகத்தில் ஈடுபடுவதோடு வெளிநாடுகளுக்கு மாணிக்கக் கற்களை ஏற்றுமதி செய்கிறது. தாய்லாந்து நாட்டின் பெங்கொக், ஹொங்கொங், அமெரிக்கா அவ்வாறு மாணிக்கக் கற்கள் ஏற்றுமதி செய்யப்படும் முன்னணி நாடுகளாகும். நீலமாணிக்கம், புஸ்பராகம், வைடூரியம், மாணிக்கக் கல் வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மிகவும் நம்பிக்கையுடன் மாணிக்கக் கற்களை வாங்கவும் விற்கவும் செல்லக்கூடிய சிறந்த இடமாக கஹவத்த குருகேமெனிக் நிறுவனம் புகழ்பெற்று விளங்குகிறது. குருகேமெனிக் நாமத்தின் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள அதீத நம்பிக்கைக்கு கிடைத்த பாராட்டாக இந்தவிருதினை கருதமுடியுமென குருகேமெனிக் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கயான் குருகே தெரிவித்தார்.

மாணிக்கக் கல் வியாபாரத்துக்கு மேலதிகமாக பெருந்தோட்டத் துறையிலும் ஹோட்டல் கைத்தொழிலும் கால்பதிப்பதற்கு குருகேமெனிக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அம்பாந்தோட்டை பீகொக் பீச் ஹோட்டல் குருகே மெனிக் நிறுவனத்தின் சகோதர நிறுவனமாகும்.

Comments