கடதாசிப் பாவனையற்ற வங்கித்துறையில் NDB புரட்சி | தினகரன் வாரமஞ்சரி

கடதாசிப் பாவனையற்ற வங்கித்துறையில் NDB புரட்சி

வங்கிக் நடவடிக்கைகள் அனைத்தையும் கடதாசிப் பாவனையற்ற டிஜிட்டல் தளத்தை நோக்கி நகர்த்தியதன் மூலம் இலங்கையின் வங்கித் துறைப் பயணத்தில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திய முதல் வங்கியாக NDB விளங்குகிறது.

வங்கியின் முதலாவது டிஜிடெல் முன்மொழிவிற்கிணங்க NDB NEOS புறக்கோட்டை கிளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. உண்மையான டிஜிடல் அனுபவம் கொண்ட வங்கியின் ஊழியர்களது பிரசன்னத்துடன் வாடிக்கையாளர்களுக்கு இச் சேவையை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கிளை NDB இன் 109 வது கிளையானது தனிப்பட்ட சேவைக்கான மனித தொடர்பாடலை உறுதிப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான தகவல்களையும் உயர் தர வாடிக்கையாளர் ஆதரவையும் வழங்குவதற்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் வாடிக்கையாளர்களின் வங்கிப் பயணத்திற்கு வலுச் சேர்க்கிறது

நாம் இந்த கிளையினூடாக உண்மையான டிஜிட்டல் அனுபவத்தை மனித தொடர்புகளுடன் வழங்குவதனூடாக வாடிக்கையாளர்களின் பயணத்தை மீள்கற்பனைக்குட்படுத்தவும் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மீள்வரையறை செய்யவும் முனைந்துள்ளோம்.

உள்நாட்டு வங்கித்துறையில் முதன்முறையாக பல சாதனங்களுடன் இணைக்கப்பட்ட முழுமையான டிஜிடல் தளம் பேட் பாட் அடிப்படையிலான வரிசை முகாமையாக்க முறைமை ஊடாடும் சாதனங்கள் மூலம் கடதாசியற்ற கணக்கு ஆரம்பம் அனைத்து தகவலுடன் கூடிய பரந்த டிஜிட்டல் திரைகள் முற்றிலும் கடதாசியற்ற பரிவர்த்தனை முறைமை மிக முக்கியமாக RPA (ரோபோடிக் ஆட்டோமேஷன் செயன்முறை) ஆகிய புத்தாக்கங்களை NDB NEOS கிளையில் அறிமுகப்படுத்துவதையிட்டு பெருமையடைகிறோம் என NDB டிஜிடல் வங்கி அதிகாரி தமித சில்வா தெரிவித்தார். இந்த உயர் தொழில்நுட்ப தளமானது முற்றிலும் உள்ளூர் திறமையை தழுவியது என்றும் இதற்கான முழுமையான எண்ணக்கரு NDB அணியினரின் சிந்தனையில் உருவானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Comments